MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரசியலில் இந்த தப்ப மட்டும் பண்ணீடாதீங்க; விஜய்க்கு பவன் கல்யாண் அட்வைஸ்

அரசியலில் இந்த தப்ப மட்டும் பண்ணீடாதீங்க; விஜய்க்கு பவன் கல்யாண் அட்வைஸ்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய்க்கு, ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவுரை ஒன்றை கூறி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 26 2025, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Pawan Kalyan Advice to Vijay : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது நடித்து வரும் ஜன நாயகன் படத்தோடு சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளார். இதையடுத்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி, அதை பலப்படுத்தி வருகிறார். இந்த நிலையில், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் விஜய்க்கு முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறி உள்ளார்.

24
Pawan Kalyan, Thalapathy VIjay

Pawan Kalyan, Thalapathy VIjay

அதில் அவர் கூறியதாவது : “விஜய் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் அவருக்கு ஆலோசனை எதுவும் தேவையில்லை. ஆனால் அவருக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்ல விரும்புகிறேன். அரசியலில் நிலைத்து இருங்கள். என்ன நடந்தாலும் மக்களோடு இருங்கள். அரசியல் ரொம்ப கஷ்டமானது. அதில் எதற்கும் தயாராக இருக்கனும். வெற்றி என்பது பின்னர் போகப் போக வரும். முதலில் கட்சியை வலுப்படுத்துவது தான் முக்கியம் என பவன் கல்யாண் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்... பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்த பவன் கல்யாண்! தமிழக அரசின் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் ஜனசேனா கட்சி!

34
Vijay, Pawan Kalyan

Vijay, Pawan Kalyan

மேலும் அரசியலுக்கு வந்துவிட்டால் பல தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கும் என பவன் கூறி இருக்கிறார். அரசியலுக்கு வந்துவிட்டால் தனிப்பட்ட வாழ்க்கை என்பது இருக்காது. தொடர்ந்து உங்களை விமர்சிப்பார்கள். எல்லோருக்கும் எதிரியாக மாற நேரிடும். ஒவ்வொரு நடிகருக்கும் சரி, ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் சரி ஒரு தனிப்பட்ட பாணி இருக்கும். எனக்கு எனது பாணி ஒர்க் அவுட் ஆனது. அது எல்லாருக்கும் சரிப்பட்டு வருமா என தெரியவில்லை.

44
Pawan Kalyan Upcoming Movies

Pawan Kalyan Upcoming Movies

அதேபோல் பகுதி நேர நடிகராகவும், பகுதி நேர அரசியல்வாதியாகவும் இருப்பதாக தன் மீது வைக்கப்படும் விமர்சனத்திற்கும் பதிலளித்துள்ள பவன் கல்யாண், எனக்கு பணம் தேவைப்படும் வரை நடிப்பேன் என கூறி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் எந்தவித சமரசமும் இருக்காது என உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் நடிப்பில் தற்போது ஓஜி, ஹரி ஹர வீர மல்லு, உஸ்தாத் பகத் சிங் போன்ற திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... சிகான் ஹூசைனியின் மரணம் - பழைய நினைவுகளை பகிர்ந்து பவன் கல்யாண் வெளியிட்ட அறிக்கை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
தமிழ் சினிமா
அரசியல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Recommended image2
மகனுக்காக சொத்தை உதறிய செல்வநாயகி! தனிமையில் வாடும் சத்யா - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image3
தன்னைவிட 13 வயது மூத்த நடிகருடன் காதல்; நின்றுபோன ராஷ்மிகாவின் முதல் திருமணம் பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved