“ப்ரியமானவளே” ஷூட்டிங்கின் போது விஜய்க்கு மனைவி சங்கீதாவிடமிருந்து வந்த செம்ம குட் நியூஸ்... என்ன தெரியுமா?
தமிழ் திரையுலகில் டாப் ஸ்டாராகவும், சோசியல் மீடியா கிங்காகவும் வலம் வரும் தளபதி விஜய், ப்ரியமானவளே ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் டாப் ஸ்டாராகவும், சோசியல் மீடியா கிங்காகவும் வலம் வரும் தளபதி விஜய், ப்ரியமானவளே ஷூட்டிங்கின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
2000ம் ஆண்டு கோலிவுட்டின் பிரபலமான ஜோடியான விஜய் - சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் “பிரியமானவளே”. வசூல் ரீதியாக மட்டுமல்லாது விஜய்யின் கேரியலிலும் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம்.
இந்த படத்தில் கமிட்டான போது தான் விஜய் முதன் முறையாக அப்பாவாகியுள்ளார். முதன் முதலாக கர்ப்பமாக இருந்த மனைவி சங்கீதா லண்டனில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார்.
ஷூட்டிங் இருந்ததால் விஜய்யால் லண்டன் செல்ல முடியாமல் போனது. இந்த சமயத்தில் தான் விஜய்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக போன் மூலம் தகவல் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த செய்தியைக் கேட்ட விஜய் செம்ம குஷியாகிவிட்டாராம். சரியாக அந்த சமயத்தில் தான் ப்ரியமானவளே படத்திலும் சிம்ரனுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பு விஜய் சந்தோஷத்தில் பாடும் “ஜூன் ஜூலை மாதத்தில்” பாடல் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது.
அந்த பாட்டை பார்த்தாலே தெரியும் விஜய் முகத்தில் அப்படியொரு சிரிப்பும் பூரிப்பும் பொங்கி வழியும். அதற்கு காரணம் விஜய் அப்பாவான சந்தோஷத்தில் அந்த ஷூட்டிங்கில் பங்கேற்றது தானாம்.