ராஜ்குமார் பெரியசாமியை சந்தித்த விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
Amaran Director Rajkumar Periasamy Meet Thalapathy Vijay : அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு விஜய்யை சந்தித்து பேசியது குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார்.
Thalapathy Vijay
Amaran Director Rajkumar Periasamy Meet Thalapathy Vijay : அமரன் படத்தின் மூலமாக புகழின் உச்சியை எட்டியிருப்பவர் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் உலகளவில் ரூ.320 கோடியை வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ.250 கோடியை எட்ட உள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாய் பல்லவி ரெபேகா ரோலில் நடித்திருந்தார்.
Thalapathy Vijay and Rajkumar Periasamy
இந்தப் படத்தின் மூலமாக மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயனுக்கு ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமி சார்பில் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் இந்தப் படம் வெளியான பிறகு நடிகர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. விஜய்யை சந்தித்து பேசியது குறித்து ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். அந்த சந்திப்பு ஒரு 25 நிமிடம் இருந்திருக்கும். அவர் துப்பாக்கி படத்தில் இருந்தது போன்றே இப்போதும் இருக்கிறார்.
Rajkumar Periasamy
மேலும், கொஞ்சம் முன்னாடியே வந்திருந்தால் நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணியிருக்கலாம் என்று கூறியதாக அவர் பகிர்ந்து கொண்டார். இவ்வளவு ஏன் அமரன் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் கூட அழைத்து பேசியதாக ராஜ்குமார் பெரியசாமி கூறியிருந்தார். விஜய் தன்னுடைய கடைசி படமான தளபதி69 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அவருக்கு கடைசி படமாக இல்லையென்றால் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்திருப்பார்.
Amaran Movie
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் தன்னுடைய 55ஆவது படத்தில் இணைந்துள்ளார். தற்போது தனுஷ் இட்லி கடை படத்தில் பிஸியாக இருப்பதால் இந்தப் படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கி படத்தில் இயக்குநர் ஏஆர் முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ராஜ்குமார் பெரியசாமி. 2017 ஆம் ஆண்டு திரைக்கு வந்த ரங்கூன் படத்தின் மூலமாக இயகுநராக அவதாரம் எடுத்தார். 7 ஆண்டுகளுக்கு பிறகு அமரன் படத்தை எடுத்து ஹிட் கொடுத்துள்ளார்.