நிர்வாணமாவே நடிச்சிட்டேன்... லிப்லாக் சீனெல்லாம் எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல...! அமலா பால் பளீச் பதில்
ஆடுஜீவிதம் திரைப்படத்தில் நடிகர் பிரித்விராஜுடன் லிப்லாப் முத்தக்காட்சியில் நடித்தது பற்றி நடிகை அமலாபால் மனம்திறந்து பேசி உள்ளார்.
மலையாள நடிகையான அமலா பால், தற்போது நாயகியாக நடித்துள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம். இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனுக்கு மனைவியாக நடித்துள்ளார் அமலா பால். பிளசி என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் பிருத்விராஜ் நஜீப் முகமது என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கி வரும் பென்யாமின் என்பவர் எழுதிய ஆடு ஜீவிதம் என்கிற நாவலை மையமாக வைத்து தான் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார் பிளசி.
கடன் தொல்லையால் அவதிப்படும் பிரித்விராஜ், கடனை அடைப்பதற்காக வெளிநாட்டிற்கு சென்று சம்பாதிக்க முடிவெடுத்து சவூதிக்கு செல்கிறார். அங்கு ஆடு மேய்ப்பவராக மாறும் அவர், என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொண்டார் என்பதை தத்ரூபமாக படமாக்கி உள்ள திரைப்படம் தான் ஆடு ஜீவிதம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டியும் இப்படத்தில் பணியாற்றி உள்ளார்.
இதையும் படியுங்கள்... watch : யுவன் - இளையராஜா சேர்ந்து இசையமைத்த ‘கஸ்டடி’ படத்தின் காதல் பாடல் இதோ
சமீபத்தில் ரிலீஸ் ஆன ஆடு ஜீவிதம் படத்தின் டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது என்று தான் சொல்ல வேண்டும். அதில் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் போது அவர் பட்ட கஷ்டங்களை பார்க்கும்போது நமக்கே கண்ணீர் வருமளவுக்கு மனதை பிசையும் அளவுக்கு அழுத்தமான காட்சிகள் நிறைந்த படமாக இது இருக்கும் என டிரைலரை பார்க்கும் போதே தோன்றுகிறது. மறுபுறம் டிரைலரில் லிப்லாக் காட்சி ஒன்றும் இடம்பெற்று இருக்கும்.
அமலா பாலும், பிருத்விராஜும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ள அந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து அமலா பால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூலாக பதிலளித்துள்ளார். ஆடு ஜீவிதம் படத்தின் கதையை சொல்லும்போதே பிருத்விராஜ் லிப்லாக் சீன் பற்றி சொன்னதாகவும், படத்திற்கும் கதைக்கும் அது தேவைப்பட்டதன் காரணமாகவே அதில் நடித்தேன் என கூறியுள்ள அவர், கதைக்கு தேவைப்பட்டதால் நிர்வாணமாகவே நடித்த தனக்கு லிப்லாக் காட்சியெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை என பதிலளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... குந்தவையாக நடிக்க திரிஷாவுக்கு கம்மி சம்பளம்... பொன்னியின் செல்வன் படத்திற்காக மொத்தமே இவ்வளவுதான் வாங்கினாரா?