இந்தியில் ரீமேக்கில் அமலா பால் சூப்பர் ஹிட் படம்... ஆடையில்லாமல் கெத்து காட்டப்போவது இந்த ஹீரோயினா?
கோலிவுட்டின் முன்னணி நடிகையான அமலா பாலுக்கு கேரியர் பிரேக்காக அமைந்த ஆடை திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘மேயாத மான்’ பட இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடித்திருந்த திரைப்படம் ஆடை. விவகாரத்திற்கு பிறகு கம்பேக் கொடுத்த அமலா பாலுக்கு இந்த படம் சிறப்பானதாக அமைந்தது.
இந்த படம் கடந்த வருடம் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வந்தது. அதற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
பெண் ஒருவர் ஆடையின்றி ஓர் இடத்தில் மாட்டிக் கொள்கிறார். அங்கிருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்ற பின்னணியில் இந்தக் கதை அமைக்கப்பட்டிருந்தது.
ஆடையில்லாமல் சிக்கிக்கொள்ளும் பெண்ணாக போல்டாக நடித்திருந்தார் அமலா பால். இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தன.
தற்போது ஆடை படத்தின் இந்தி ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் அருண் பாண்டியன் மும்பையில் உள்ள பிரபல தயாரிப்பு நிறுவனத்திற்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியிலும் ரத்னகுமார் தான் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியில் அமலா பால் நடித்த போல்டான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஷ்ரத்தா கபூரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.