- Home
- Cinema
- Suja varunee : கும்முனு இருந்த பிக்பாஸ் சுஜாவா இது? ஸ்லிம் பிட்டாக மாறி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்குறாங்களே!
Suja varunee : கும்முனு இருந்த பிக்பாஸ் சுஜாவா இது? ஸ்லிம் பிட்டாக மாறி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்குறாங்களே!
குழந்தை பிறந்த பின்னர் கும்முனு குண்டு உடல்கட்டுக்கு மாறிய சுஜா வருணி (Suja varunee)தற்போது, மீண்டும் உடல் எடையை பாதியாக குறைத்து... இளம் நாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி பல படங்களில் நடித்தவர் சுஜா வருணி.
பிக்பாஸ் தமிழ் 2வது சீசனில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார். பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பல ஆண்டுகளாக காதலித்து வந்த இருவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
சுஜா வருணி - சிவக்குமார் தம்பதிக்கு அத்வைத் என்கிற அழகிய ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், இவர் அவ்வப்போது கணவர் மற்றும் குழந்தையோடு எடுத்து கொள்ளும் புகைப்படத்தையும் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தாயான பிறகு மகனை சுற்றியே சுஜா வருணியின் நாட்கள் நகர்ந்து வந்த நிலையில், சமீப காலமாக மீண்டும் படவாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கியுள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் கூட சுஜா வருணி, திரிஷ்யம் 2 தெலுங்கு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் நல்ல கதைகள் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன் என கூறி இருந்தார்.
மீண்டும் நடிப்புக்கு பிளான் போட்டுள்ள சுஜா, தற்போது... உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறி வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.