- Home
- Cinema
- இந்தியாவில் எந்த ஒரு படமும் படைத்திராத மாபெரும் சாதனையை படைத்த ‘புஷ்பா’ - கொண்டாடும் ரசிகர்கள்
இந்தியாவில் எந்த ஒரு படமும் படைத்திராத மாபெரும் சாதனையை படைத்த ‘புஷ்பா’ - கொண்டாடும் ரசிகர்கள்
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான புஷ்பா திரைப்படம் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரிலீசான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் அனசுயா பரத்வாஜ், பகத் பாசில், சுனில், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்த இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான பாடல்களும் முக்கிய பங்காற்றின.
இதையும் படியுங்கள்... 'சந்திரமுகி 2' படத்தில் நடிப்பதற்கு முன்பு ரஜினிகாந்த் காலில் விழுந்து ஆசி பெற்ற ராகவா லாரன்ஸ்!
இதில் இடம்பெற்ற சாமி சாமி, ஸ்ரீவள்ளி, ஊ சொல்றியா மாமா ஆகிய பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பின. குறிப்பாக ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்ததால் இதற்கு வேறலெவலில் வரவேற்பு கிடைத்திருந்தது. இதுமட்டுமின்றி சாமி சாமி, ஸ்ரீவள்ளி ஆகிய பாடல்களில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ஆடிய டான்ஸ் ஸ்டெப்களை ரீல்ஸாக பதிவிட்டவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே ரீச் ஆகி இருந்தன.
இந்நிலையில், புஷ்பா படத்தின் பாடல்கள் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளது. அதன்படி இந்திய அளவில் 5 பில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்ற முதல் ஆல்பம் என்கிற சாதனையை புஷ்பா படம் படைத்துள்ளது. இந்திய அளவில் எந்த ஒரு படமும் நிகழ்த்திராத ஆல் டைம் ரெக்கார்டை புஷ்பா படம் நிகழ்த்திக் காட்டி உள்ளதால் அப்படத்திற்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனை ‘மாவீரன்’ ஆக்கிய மண்டேலா இயக்குனர்... புரோமோவில் ரஜினி ஸ்டைலில் அதகளப்படுத்தும் எஸ்.கே
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.