அக்கா ஸ்ருதி மற்றும் தந்தை கமல்ஹாசண்டு பிறந்தநாள் கொண்டாடிய அக்ஷரா..! வைரலாகும் புகைப்படம்..!
பிரபல நடிகர் கமல்ஹாசனின் (Kamal hassan) மகளும் நடிகையுமான அக்ஷராஹாசன் (Akshara Hassan) தன்னுடைய பிறந்தநாளை அக்கா ஸ்ருதி (Shruthi hassan) மற்றும் தந்தை கமல்ஹாசனுடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு அக்ஷராவுக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஸ்ருதி.
அப்பா, மற்றும் அக்கா ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து, துணை இயக்குனராக பல படங்களில் பணியாற்றிய அக்ஷரா ஹாசனும் அவ்வப்போது சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். பாலிவுட் திரையுலகில் 'ஷமிதாப்' படத்தில் மூலம் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து தமிழில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அஜித்தின் 'விவேகம்', விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடிக்க வில்லை என்றாலும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.
மேலும் தமிழில் 'அகினி சிறகுகள்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதை தொடர்ந்து 'Fingertip ' என்கிற வெப் சீரிஸ், மற்றும் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' என்கிற படமும் இவரது கைவசம் உள்ளது.
இந்நிலையில் இவர் நேற்று இரவு, தன்னுடைய சகோதரி ஸ்ருதி மற்றும் தந்தை கமல்ஹாசனுடன் 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை ஸ்ருதிஹாசன் வெளியிட்டு தன்னுடைய தங்கைக்கு வாழ்த்து தெரிவிக்க, அக்ஷராவும் நன்றி அக்கா என கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.