உடல்நல பிரச்சனையால் அவதிப்படும் சமந்தா குணமடைய வாழ்த்திய முன்னாள் கணவர் தம்பி..!
மயோசிடிஸ் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் வேண்டும் என, அவரது முன்னாள் கணவரின் தம்பி அகில் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகை சமந்தா சமீபத்தில், தனக்கு மயோசிடிஸ் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், நினைத்ததை விட இந்த பிரச்சனை குணமாவதற்கு நாட்கள் எடுப்பதாக தெரிவித்திருந்தார். இவரது இந்த தகவல் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியடை செய்த நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் பலர் தொடர்ந்து இவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவின் தம்பி அகில் சமந்தா குணமடைய வாழ்த்து கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தினால் பிக்பாஸ் காணாமல் போய்விடும்! நடிகர் மன்சூர் அலிகானின் சூப்பர் பிளான்!
'அனைவரது அன்பும், வலிமையையும், எப்போதும் இருக்கும் டியர் சாம் என தெரிவித்துள்ளார். இதன் மூலம்... சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்த பின்னரும், இன்னும் நாகசைதன்யாவின் குடும்பத்தினர் சமந்தா மீது அன்பாக இருப்பதை பார்க்க முடிவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு மாதமாக சமந்தா சரும பிரச்சனையால் அவதி பட்டு வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அவர் தன்னுடைய நோய் எதிர்ப்பு குறைபாடு பிரச்சனை குறித்தும், அதற்காக எடுத்து வரும் சிகிச்சை குறித்தும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது.
மேலும் செய்திகள்: Samantha: வேதனையில் இருக்கும் சமந்தாவுக்கு 'சீக்கிரம் குணமாகிவிடுவீங்க' என ஆறுதல் கூறிய சூப்பர் ஸ்டார்!