அடுத்தடுத்து வர உள்ள ஏகே 62 படத்தின் 2 மாஸ் அப்டேட்டுகள்... அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்
நடிகர் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள புதிய திரைப்படமான ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் குறித்த தகவல் கசிந்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. துணிவு படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின் அஜித் நடிக்க உள்ள படம் ஏகே 62. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த இப்படம் பின்னர் மகிழ் திருமேனி வசம் சென்றது. இப்படத்தை இயக்க மகிழ் திருமேனி கமிட் ஆகி 2 மாதங்களுக்கு மேல் ஆகியும், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.
வலிமை அப்டேட்டுக்கு பின்னர் அஜித் ரசிகர்கள் நீண்ட நாள் காத்திருந்த அப்டேட் என்றால் அது ஏகே 62 படத்தின் அப்டேட் தான். ரசிகர்களின் பொறுமையை சோதிக்க விரும்பாத லைகா நிறுவனம், ஒரு வழியாக ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட தயாராகிவிட்டது. ரசிகர் இவ்வளவு நாட்கள் அமைதியாக காத்திருந்ததற்கு பலனாக ஒன்றல்ல அடுத்தடுத்து இரண்டு அப்டேட்டுகள் வெளியாக உள்ளன. இதனால் அஜித் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக அமைய உள்ளது.
இதையும் படியுங்கள்... சர்ச்சை ராணியாக வலம் வந்த நயன்தாரா சந்தித்த டாப் 10 சர்ச்சைகள்
நடிகர் அஜித் தனது 52-வது பிறந்தநாளை நாளை கொண்டாட உள்ளார். அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தான் ஏகே 62 படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட இருக்கிறது. அதன்படி இன்று மாலை 6 மணி அல்லது நள்ளிரவு 12 மணிக்கு ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவதோடு, அப்படத்தின் டைட்டிலையும் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாம் படக்குழு. இதற்கு ‘விடா முயற்சி’ என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
ஏகே 62 படத்தின் டைட்டிலை போஸ்டர் மூலம் வெளியிட உள்ளார்களா அல்லது லியோ பட பாணியில் டீசர் மூலம் ரிலீஸ் செய்ய இருக்கிறார்களா என்பது குறித்த விவரம் வெளியாகவில்லை. ஆனால் அப்படத்தின் டைட்டில் வெளியாவது மட்டும் உறுதி. இதையடுத்து மே மாதத்தில் ஏகே 62 படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் மகிழ் திருமேனி, இதற்கான ஆரம்பக்கட்ட பணிகளும் ஒருபக்கம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... ஆந்திர அரசியலில் புயலை கிளப்பிவிட்டு... சைலண்டாக வந்து தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வாக்களித்த ரஜினி