MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்... ரெண்டுமே வேறலெவல் அப்டேட் மிஸ் பண்ணீடாதிங்க

அஜித் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் டிரீட்... ரெண்டுமே வேறலெவல் அப்டேட் மிஸ் பண்ணீடாதிங்க

Ajith Birthday surprise :  நடிகர் அஜித்தின் பிறந்தநாள் வருகிற மே 1-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நடிகர் அஜித் நடிக்கும் படங்கள் குறித்த 2 அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

1 Min read
Author : Ganesh A
Published : Apr 29 2022, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து அஜித் நடிப்பில் ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

24

இதனிடையே நடிகர் அஜித் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படம் குறித்த அப்டேட்டும் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதன்படி அப்படத்தை நடிகை நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

34

இந்நிலையில், நடிகர் அஜித்தின் பிறந்தநாள் வருகிற மே 1-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நடிகர் அஜித் நடிக்கும் படங்கள் குறித்த 2 அப்டேட் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் ஒன்று அஜித் தற்போது நடிக்கும் ஏகே 61 படத்துடையது என்றும் மற்றொன்று ஏகே 63 படத்துடையது என்றும் கூறப்படுகிறது.

44

அதன்படி பார்த்தால், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் தலைப்பு மே 1-ந் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அடுத்ததாக ஏகே 63 படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  நயன்தாராவுடன் காத்துவாக்குல காதல் செய்யும் வீடியோவை பதிவிட்டு... தங்கமே என உருகிய விக்னேஷ் சிவன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாணத்துக்கு முன்னாடியே கண்டிஷனா? விஜய் தேவரகொண்டாவை எச்சரித்த ராஷ்மிகா - பின்னணி என்ன?
Recommended image2
வில்லன் டூ காமெடி கிங்! ஸ்டண்ட் கலைஞராக இருந்து மொட்டை ராஜேந்திரன் உருவான கதை!
Recommended image3
மீண்டும் ஒரு 'டாண்' மேஜிக்? சிவகார்த்திகேயன் - தாய்க்கிழவி காம்போ.. ரசிகர்கள் கொண்டாடும் அந்த ஸ்பெஷல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved