பொன்னியின் செல்வனில் அஜித் மனைவி ஷாலினி? தீயாய் பரவும் தகவல் !
மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி நடித்துள்ளதாக தகவல் கசிந்தன. முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் ஷாலினி மறு பிரவேசம் செய்வதாக சொல்லப்படுகிறது.

Ajith - shalini
என் அம்முக்குட்டி யம்மாவாக க்யூட் நடிப்பை வெளிப்படுத்திய சுட்டி குழந்தை சுட்டி குழந்தையாக அறிமுகமான ஷாலினி 80களின் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான அம்லூ என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் . பின்னர் 90 களின் இறுதியில் நாயகியாக களம் கண்ட ஷாலினி தமிழில் அறிமுகமான முதல் படம் காதலுக்கு மரியாதை. முதல் படமான பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. இதையடுத்து அமர்க்களம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஷாலினிக்கும் நாயகனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
Ajith - shalini
கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுக்கு நாயகியானார் ஷாலினி. 2000-தில் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி அஜித்தான பிறகு ஏற்கனவே கமிட் ஆகியிருந்த பிரியாத வரம் வேண்டும் என்னும் படத்தில் பிரசாந்துடன் நடித்திருந்ததை அடுத்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இரு பிள்ளைகளுக்கு தாயான ஷாலினி முன்பு பொது இடங்களுக்கு வருவதை தவிர்த்திருந்தார். பின்னர் பிள்ளைகள் தொ;தோலுக்கு மேல் வளர்ந்த பிறகு சமீபகாலமாக அடிக்கடி வெளியில் வரும் ஷாலினியில் நயன்தாரா திருமண பிரவேசம் வைரலாகி இருந்தது.
Ponniyin Selvan
இந்நிலையில் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி நடித்துள்ளதாக தகவல் கசிந்தன. ஏற்கனவே இந்த படத்தில் சியான் விக்ரம் , ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் , த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரகாஷ் ராஜ் , பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் ஷாலினி மறு பிரவேசம் செய்வதாக சொல்லப்படுகிறது.
ஷாலினி விவகாரம் குறித்து விளக்கம் அளித்த பொன்னியின் செல்வன் படக்குழு...மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் ஷாலினி முக்கிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.