பிள்ளைகளுடன் அவுட்டிங் சென்றுள்ள அஜித்..! கைக்குழந்தையுடன் கொடுத்த ஸ்டைலிஷ் போஸ்... வைரலாகும் புகைப்படம்!!
அஜித் (Ajith) நடிப்பில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிட தவறுவது இல்லை. அந்த வகையில் அஜித், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் அவுட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
அஜித் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குனர் எச் வினோத் மற்றும் போனி கபூருடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். அந்த வகையில் 'வலிமை' படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக 'AK61' படத்தில் கைகோர்த்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படம் பேங்க் ஹீஸ்ட் த்ரில்லர் என்று கூறப்படும் நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்துவிட்ட நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: மனசுல அஞ்சலி பாப்பானு நினைப்போ... தம்மாத்துண்டு கவுனில் ஊர் சுற்றும் பிக்பாஸ் சாக்ஷி அகர்வால்!!
அஜித் தனக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம்... பைக் ரைட், துப்பாக்கி சூடு, போட்டோ கிராஃபி, என தன் மனதுக்கு பிடித்ததை செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
மேலும் செய்திகள்: டைட் ஷர்ட் அணிந்து... ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் போஸ் கொடுத்த ஷாலு ஷம்மு!! அதகள போட்டோஸ்!!
அதே நேரம் தன்னுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக வெளிநாடுகளுக்கும் செல்வது உண்டு. அந்த வகையில் தற்போது அஜித் தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் அவுட்டிங் சென்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
இந்த புகட்டடத்தில் அஜித், கைக்குழந்தை ஒன்றை தூக்கிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு பின்னால் அஜித்தின் மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆகியோர் நிற்பது தெரிகிறது.இந்த புகைப்படத்தை வழக்கம் போல் அஜித் ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் தாறுமாறாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் செய்திகள்: பேன்ட் போட மறந்துடீங்களா? சட்டை மட்டும் அணிந்து வாழைத்தண்டு கால்களை காட்டி வாயடைக்க செய்த மீரா ஜாஸ்மின்!