- Home
- Cinema
- விஜய், அஜித் முதல் சிம்பு வரை... சம்பளமே வாங்காமல் நடித்து ஆச்சர்யப்படுத்திய கோலிவுட் ஸ்டார்ஸின் லிஸ்ட் இதோ
விஜய், அஜித் முதல் சிம்பு வரை... சம்பளமே வாங்காமல் நடித்து ஆச்சர்யப்படுத்திய கோலிவுட் ஸ்டார்ஸின் லிஸ்ட் இதோ
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரின் சம்பளம் 100 கோடிகளை தாண்டிவிட்ட நிலையில், சம்பளமே வாங்காமல் நடித்த நடிகர்கள் பற்றிய லிஸ்ட்டை இந்த தொகுப்பில் காணலாம்.

திரையுலகில் நடிக்கும் நடிகர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளமாக வழங்கப்பட்டு வருகின்றனர். சமீப காலமாக நடிகர்களின் சம்பளங்கள் ரூ.100 கோடிக்கு மேல் சென்றுவிட்டது. அப்படி இருக்கையில், நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடிக்கும் நடிகர்களும் திரையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
அஜித்
தமிழ் திரையுலகில் எந்தவித சினிமா பின்புலமும் இன்றி அறிமுகமாகி தன் கடின உழைப்பால் முன்னேறி, இன்று கோடாணகோடி ரசிகர்களின் மனதில் அரியணை போட்டு அமர்ந்திருப்பவர் அஜித். அவரும் ஒரு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார். அது இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் தான். ஸ்ரீதேவி மீதுள்ள மதிப்பு மற்றும் மரியாதையின் காரணமாக இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த அஜித், அதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லையாம்.
சிம்பு
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த பல இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பளித்தவர் சிம்பு. இன்று முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம் கூட இவரால் அறிமுகம் செய்யப்பட்டவர் தான். இவர் ஹீரோவாக நடித்த கண்ணா லட்டு திண்ண ஆசையா படத்தில் நடிகர் சிம்பு ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். இதற்காக அவர் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... 18 ஆண்டுகளுக்கு முன் காதலித்து பிரேக் அப் செய்த நடிகரை 4-வது திருமணம் செய்துகொண்டார் நடிகை ஜெனிபர் லோபஸ்
சூர்யா
கோலிவுட்டில் டாப் நடிகராக வலம் வரும் சூர்யா, சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் எனும் மிரட்டலான வில்லன் ரோலில் நடித்திருந்தார். 5 நிமிடங்களே வந்தாலும், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு கதாபாத்திரமாக ரோலெக்ஸ் இருந்தது. இந்த ரோலில் நடிக்க நடிகர் சூர்யா சம்பளமே வாங்கவில்லை. அதுமட்டுமின்றி மாதவனின் ராக்கெட்ரி படத்திலும் சூர்யா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இதற்கும் அவர் சம்பளம் வாங்கவில்லையாம்.
தனுஷ்
கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியாக நடித்து வரும் தனுஷும் ஒரு படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்து இருக்கிறார். அது சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் படம் தான். இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் வந்து சிவகார்த்திகேயனுடன் நடனம் ஆடி இருப்பார் தனுஷ். இதற்காக அவர் எந்த வித தொகையும் சம்பளமாக பெறவில்லையாம்.
விஜய்
தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் விஜய். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டாரம். இதுதவிர ஒருநாள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளாராம். அவர் நடிக்க உள்ள காட்சி விரைவில் சென்னையில் படமாக்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்... பிரபல பாலிவுட் நடிகையின் சகோதரருடன் மாலத்தீவில் மஜா பண்ணும் இலியானா... மீண்டும் காதலில் விழுந்த இடுப்பழகி?