தனுஷ் படத்துக்கு போட்டியாக ரிலீசாகும் விடாமுயற்சி; லீக்கான ரிலீஸ் தேதி இதோ
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம், நடிகர் தனுஷ் படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
vidaamuyarchi
அஜித்குமார் நடிப்பில் உருவாகி உள்ள அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படம் தான் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் ரெஜினா கசெண்ட்ரா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிக் பாஸ் பிரபலம் ஆரவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.
Ajith Kumar, Trisha
விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் இப்படம் பொங்கல் ரேஸில் இருந்து ஜகா வாங்கியது. இப்படம் பிரேக்டவுன் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. அதன் ரீமேக் உரிமையை வாங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து விலகியது. இதையடுத்து இப்படம் எப்போ ரிலீஸ் ஆகும் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி அப்டேட்! அஜித் படத்தின் டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Vidaamuyarchi Release Date
அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாம். இன்று வெளியாக உள்ள விடாமுயற்சி படத்தின் டிரெயிலரின் இந்த புது ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது. இதன்மூலம் தனுஷ் படத்துக்கு போட்டியாக அஜித்தின் விடாமுயற்சி ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. தனுஷ் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் பிப்ரவரி 7ந் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
Neek Movie
தற்போது விடாமுயற்சியின் வருகையால் தனுஷ் படம் பிப்ரவரி 7-ந் தேதி திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், பவிஷ் என முழுக்க முழுக்க இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ள படம். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இது நடிகர் தனுஷ் இயக்கும் மூன்றாவது திரைப்படமாகும். இதேபோல் தனுஷ் இயக்கிய மற்றொரு படமான இட்லி கடை படத்துக்கு போட்டியாக ஏப்ரல் 10ந் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விடாமுயற்சி டூ தளபதி 69; 2025-ல் சம்பவம் செய்ய காத்திருக்கும் 7 படங்கள்!