அஜித் பட வில்லனுக்கு விரைவில் “டும்டும்டும்” ... வைரலாகும் அழகிய ஜோடியின் கண்படும் போட்டோ...!
வேதாளம் படத்தில் வில்லனாக நடித்த கபிர் துஹான் சிங் தனது நீண்ட நாள் காதலியை விரைவில் மணமுடிக்க உள்ளார். கல்யாணம் குறித்து வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவல்கள் இதோ...
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்த வேதாளம் படம் மூலம் தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமானவர் கபிர் துஹான் சிங்.
தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான படம் விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார்.
கபிர் துஹான் சிங் பாடகி டாலி சித்துவை காதலித்து வருகிறார். பஞ்சாபி திரையுலகில் பிரபலமான டாலிக்கும், கபிர் துஹான் சிங்கிற்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.
2020ம் ஆண்டின் துவக்கத்தில் திருமணம் செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்திருந்த நிலையில், கொரோனா காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் மும்பையில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள் இந்த காதல் ஜோடி, டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.