- Home
- Cinema
- Ajith Valimai movie : அச்சுறுத்தும் ஒமைக்ரான்.... அஜித்தின் வலிமை படத்துக்கு வந்த புது சிக்கல்
Ajith Valimai movie : அச்சுறுத்தும் ஒமைக்ரான்.... அஜித்தின் வலிமை படத்துக்கு வந்த புது சிக்கல்
இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் என்கிற உருமாறிய கொரோனா வைரஸ், வலிமை (Valimai) படத்துக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடித்துள்ளார்.
மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி இசை உள்ளிட்ட வேலைகளில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வலிமை (Valimai) படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழில் தயாராகி உள்ள இப்படத்தை தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
வலிமை படத்தின் முதல் காட்சியை தமிழகத்தில் நள்ளிரவு 1 மணிக்கே திரையிட திட்டமிட்டு இருந்தனர். இதன்மூலம் படத்தின் வசூலும் அதிகரிக்கும் என திரையரங்க உரிமையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் தற்போது இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் என்கிற உருமாறிய கொரோனா வைரஸ், வலிமை படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தமிழகத்திலும் விரைவில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வாறு நடந்தால், வலிமை படத்தின் ஸ்பெஷல் காட்சிகள் மற்றும் இரவு காட்சிகளும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் படத்தின் வசூலும் பாதிக்கக்கூடும் என்பதால் படக்குழுவினரும், திரையரங்க உரிமையாளர்களும் குழப்பமடைந்து உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.