- Home
- Cinema
- Valimai Ajith: அட்ரா சக்க... இப்போதே 'வலிமை' படத்துக்கு போஸ்டர் அடித்து... ரணகளம் பண்ணும் அஜித் ரசிகர்கள்!
Valimai Ajith: அட்ரா சக்க... இப்போதே 'வலிமை' படத்துக்கு போஸ்டர் அடித்து... ரணகளம் பண்ணும் அஜித் ரசிகர்கள்!
அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், இந்த படத்திற்கு இப்போதே போஸ்டர் அடித்து மாஸ் காட்டி வருகிறார்கள் தல ரசிகர்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அஜித் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ள திரைப்படம் என்றால் அது வலிமை தான். இந்த படத்தின் அப்டேட் கேட்டு, ரசிகர்கள் செய்த அளப்பறைக்கு பஞ்சமே இல்லை. பிரதமர், முதல்வர், கிரிக்கெட் ஸ்டேடியம் என பழனி முருகர் வரை சென்று அப்டேட் கேட்டு வந்தனர்.
ரசிகர்களின் அட்ராசிட்டிக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக, அஜித்... கடுப்பாகி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார். பின்னர் ஒருவழியாக அடுத்தடுத்து இந்த படத்தின் புது புது அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை 6:30 மணிக்கு வலிமை படத்தில் இடம்பெற்றுள்ள அம்மா செண்டிமெண்ட் பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலின் ரிலீஸ் குறித்து அறிவித்த போது, படக்குழு வெளியிட்ட ப்ரோமோ வீடியோ வேற லெவலுக்கு ரசிக்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க, 'வலிமை' படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும், இப்போதே அஜித்துக்கு போஸ்டர் அடித்து படத்தை வரவேற்க துவங்கிவிட்டனர் ரசிகர்கள்.
இது குறித்த சில புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாக, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
எப்போதும் படம் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இது போன்ற செயல்களில் ரசிகர்கள் ஈடுபடுவது வழக்கம் ஆனால் தற்போது, ஒரு மாதத்திற்கு முன்னரே அளப்பறையை துவங்கி விட்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.