MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 20 மில்லியனை நெருங்கும் 'துணிவு' படத்தின் ட்ரைலர்! யூ டியூப்பில் அடித்து நொறுக்கும் சாதனை!

20 மில்லியனை நெருங்கும் 'துணிவு' படத்தின் ட்ரைலர்! யூ டியூப்பில் அடித்து நொறுக்கும் சாதனை!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு' படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையல் , யூ டியூபில் இந்த ட்ரைலர் 20 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Jan 01 2023, 01:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நடிகர் அஜித்தை வைத்து இயக்குனர் எச்.வினோத் மூன்றாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'துணிவு'. இதற்கு முன்னர் எச்.வினோத், அஜித்தை வைத்து இயக்கிய 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய இரண்டு படங்களும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்த நிலையில்... மூன்றாவதாக வெளியாக உள்ள 'துணிவு' திரைப்படமும் ஹார்டிக் வெற்றி பெறுமா? என அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

'துணிவு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது. எனவே இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் அவ்வபோது வெளியாகி வருகிறது. படக்குழுவினரும் தீவிர புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சமீபத்தில் 'துணிவு' படத்தை விமானத்தில் இருந்து குதித்து, ஸ்கை டைவிங் மூலம் துபாயில் பட குழுவினர் ப்ரொமோட் செய்தனர்.  இது குறித்த வீடியோவை போனி கபூர் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டது.

'வாரிசு' படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு... போஸ்ட்டரை வெளியிட்ட ஏமாற்றம் கொடுத்த படக்குழு!

35

அதேபோல் பெரிய வேன், கார், போன்றவற்றிலும் அஜித்தின் துணிவு படத்தின் போஸ்டரை ஸ்டிக்கரிங் செய்து ரசிகர்கள் புரமோட் செய்து வருகிறார்கள். நேற்றைய முன் தினம், 'துணிவு' படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் கேரக்டர் லுக் மற்றும் அவர்களின் கதாபாத்திரம் குறித்த பெயர்கள் வெளியான நிலையில், நேற்று இரவு சரியாக ஏழு மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு 'துணிவு' படத்தின் டிரைலர் வெளியானது.
 

45

இந்த ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே, அதிக ரசிகர்களால் யூட்யூபில் பார்க்கப்பட்டு அடுத்தடுத்து சாதனை நிகழ்த்தி வருவதாக ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில், தற்போது இந்த ட்ரைலர் 20 மில்லியனை நேருகிறது. இந்த சாதனையை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வழக்கம் போல் கொண்டாடி வருகின்றனர்.

உன் வாழ்க்கை உன் கையில்..! ரஜினிகாந்த் - கமல் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து!
 

55

கடைசியாக அஜித்தின் வீரம் திரைப்படமும், விஜய்யின் ஜில்லா திரைப்படமும் கடந்த 2014 ஆம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஒரே நேரத்தில் வெளியாகி, இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில்... சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் இதே பொங்கல் திருவிழாவில் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Recommended image2
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image3
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved