Valimai Movie :என்ன இப்படி ஆயிருச்சு... முதல் நாளே வலிமைக்கு காத்திருந்த அதிர்ச்சி- அப்போ கலெக்ஷன் அவ்ளோதானா?
நேற்றைய தினம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி போல் மாறியது. திரையரங்குகளில் பிரம்மாண்ட கட் அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்தனர். அதுமட்டும் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் (Ajith). கடின உழைப்பால் திரையுலகில் முன்னுக்கு வந்து உச்ச நட்சத்திரமாக உயர்ந்துள்ள இவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றால் இவரது ரசிகர்கள் தான். மீடியா வெளிச்சம் படமால், எந்த சமூக வலைதளங்களிலும் அஜித் இல்லாத போது அவருக்கான ரசிகர் வட்டம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு தான் போகிறது.
அஜித் ரசிகர்களுக்கு கடந்த 2.5 ஆண்டு பெரும் சோதனைக் காலம் தான். அந்த சமயத்தில் அஜித்தின் ஒரு படம் கூட ரிலீசாகவில்லை. இதனால் அவர் நடித்த வலிமை (Valimai) படத்துக்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு எகிறி வந்தது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகமெங்கும் நேற்று வலிமை திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.
இதனால் நேற்றைய தினம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளி போல் மாறியது. திரையரங்குகளில் பிரம்மாண்ட கட் அவுட் வைத்து அதற்கு பாலாபிஷேகம் செய்தனர். அதுமட்டும் தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். தமிழ் நாட்டில் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வலிமை திரையிடப்பட்டது.
திரும்பும் இடமெல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக இருந்ததால் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஏனெனில் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக மக்கள் தியேட்டருக்கு வர அச்சப்பட்ட நிலையில், வலிமை (Valimai) மூலம் திரையரங்குகள் புத்துயிர் பெற்றுள்ளன. மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை பார்த்து கோலிவுட்டே நிம்மதி பெருமூச்சு விடுகிறது.
இந்த நிலையில், வலிமை படக்குழுவுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் அதிர்ச்சி தரும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதன்படி வலிமை படம் இணையதளங்களில் கசிந்துள்ளது. பல்வேறு திருட்டி இணையதளங்கள் வலிமை (Valimai) படத்தை சட்டவிரோதமாக பதிவேற்றி உள்ளதால் இப்படத்தின் வசூல் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது. இந்த செய்தியை அறிந்த படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள், வலிமை படத்தை தியேட்டரில் கண்டுகளியுங்கள் என வேண்டுகோள் விடுத்து் வருகின்றனர். திருட்டு வலைதளங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்... Valimai Review : தட்டித்தூக்கினாரா அஜித்?... வலிமை worth-ஆ... இல்லையா? - முழு விமர்சனம் இதோ