MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • எந்த தமிழ் படமும் செய்திராத தாறுமாறான சாதனை படைத்து... ஓடிடியிலும் கெத்து காட்டும் அஜித்தின் துணிவு

எந்த தமிழ் படமும் செய்திராத தாறுமாறான சாதனை படைத்து... ஓடிடியிலும் கெத்து காட்டும் அஜித்தின் துணிவு

திரையரங்கை தொடர்ந்து ஓடிடியிலும் துணிவு படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 15 2023, 10:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. வங்கியில் நடக்கும் சுரண்டல்களை வெளிச்சம் போட்டு காட்டிய இப்படத்தில் நடிகர் அஜித் உடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் சமுத்திரக்கனி, அமீர், பாவனி, சிபி சந்திரன், மோகன சுந்தரம், குக் வித் கோமாளி தர்ஷன், ஜான் கொகேன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

துணிவு திரைப்படம் ரூ.200 கோடிக்கு மேல் கலெக்‌ஷனையும் அள்ளியது. திரையரங்குகளில் இன்னும் வெற்றிகரமாக ஓடி வரும் இப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும் துணிவு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் ஓடிடியிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அதன்படி உலகளவில் ஒரு வாரம் அதிகளவில் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத பிற மொழி படங்களின் டாப் 10 பட்டியலை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... தவறாக நடக்க முயன்ற வில்லன் நடிகர்... ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொல்ல முயன்றார் - ரஜினி பட நடிகை பகீர் புகார்

34

அதன்படி துணிவு திரைப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி வெர்ஷன் அந்த பட்டியலில் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நெட்பிளிக்ஸின் டாப் 10 பட்டியலில் 2 இடங்களைப் பிடித்த முதல் தமிழ் படம் என்கிற சாதனையை துணிவு படைத்துள்ளது. அஜித் படம் செய்துள்ள இந்த தாறுமாறான சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் துணிவு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

44

அதிலும் குறிப்பாக துணிவு படத்தின் தமிழ் வெர்ஷன் ஒரு வாரத்தில் 40 லட்சத்து 50 ஆயிரம் மணிநேரம் ஸ்டிரீம் செய்யப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்லது. அதேபோல் துணிவு படத்தின் இந்தி வெர்ஷன் 37 லட்சத்து 30 ஆயிரம் மணிநேரம் ஸ்டிரீம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. திரையரங்கை தொடர்ந்து ஓடிடியிலும் அஜித்தின் துணிவு படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... காதலர் தினத்தன்று காதலனை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் ஆயிஷா - இரவில் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் வைரல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved