- Home
- Cinema
- குட் பேட் அக்லியை ரிஜெக்ட் பண்ணிய சன் டிவி; லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தட்டிதூக்கியது யார் தெரியுமா?
குட் பேட் அக்லியை ரிஜெக்ட் பண்ணிய சன் டிவி; லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா தட்டிதூக்கியது யார் தெரியுமா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது.

Good Bad Ugly Satellite Rights
அஜித் குமாரின் 63வது படம் குட் பேட் அக்லி. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். இப்படத்தில் நடிகர் அஜித் டான் ஆக நடித்திருந்தார். அவரின் மனைவி கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்க, வில்லனாக அர்ஜுன் தாஸ் மற்றும் பிரியா வாரியர் நடித்திருந்தனர். குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி இருந்தார் அஜித். ஏனெனில் அவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த விடாமுயற்சி படம் அட்டர் பிளாப் ஆனது.
குட் பேட் அக்லி மூலம் கம்பேக் கொடுத்த அஜித்
குட் பேட் அக்லி படம் வெளியாகி நடிகர் அஜித்துக்கு தரமான கம்பேக் படமாக அமைந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகன் என்பதால், இப்படத்தில் ஒவ்வொரு பிரேமிலும் செதுக்கி இருந்தார். அஜித் ரசிகர்களுக்கு குட் பேட் அக்லி திரைப்படம் பக்கா ட்ரீட் ஆக அமைந்தது. குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம்பெற்ற பழைய பாடல்களும் ஒரு காரணம். ஒத்த ரூபா தாரேன், தொட்டு தொட்டு பேசும் சுல்தானா ஆகிய பாடல்கள் அப்படம் ரிலீஸ் ஆன பின்னர் மீண்டும் சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆகின.
குட் பேட் அக்லி சாட்டிலைட் உரிமம்
குட் பேட் அக்லி படத்தின் அதிரி புதிரியான வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித், தனது அடுத்த படத்தையும் இயக்கும் பொறுப்பை ஆதிக் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்து உள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே குட் பேட் அக்லி திரைப்படத்தின் சட்டிலைட் உரிமம் விற்பனையாகவில்லை என சர்ச்சை எழுந்தது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை படம் ரிலீஸ் ஆகும் முன்னரே சன் டிவி வாங்கி இருந்தது. ஆனால் படத்தின் ரிலீசுக்கு பின்னர் அந்த டீலை சன் டிவி கேன்சல் செய்துகொண்டதாம். இதனால் குட் பேட் அக்லி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை யார் கைப்பற்றுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
விஜய் டிவி வசம் சென்ற குட் பேட் அக்லி
இந்த நிலையில், தற்போது குட் பேட் அக்லி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவி கைப்பற்றும் முதல் அஜித் படம் இதுவாகும். இப்படத்தை விநாயகர் சதுர்த்திக்கு விஜய் டிவியில் ஒளிபரப்ப திட்டமிட்டு வருகிறார்களாம். முதன்முறையாக அஜித் படத்தை விஜய் டிவி கைப்பற்றி உள்ளதால் இதற்கு நல்ல டிஆர்பி ரேட்டிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படம் கடந்த மே மாதமே நெட்பிளிக்ஸில் வெளியாகி நல்ல வியூஸ் அள்ளியது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

