ரஜினியின் ஜிகிரி தோஸ்துடன் அடுத்த படம்; குட் பேட் அக்லி இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்!
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக மாஸ் நடிகர் ஒருவருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.

Adhik Ravichandran Next Movie :
ஜிவி பிரகாஷ் குமார் நடித்த திரிஷா இல்லேனா நயன்தாரா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் இயக்கிய AAA மற்றும் பஹீரா ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இதன்பின்னர் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அடுத்ததாக அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கினார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பாலகிருஷ்ணா
அஜித்தின் ஃபேன் பாய் சம்பவமாக இப்படத்தை செதுக்கி இருந்தார் ஆதிக், இப்படம் உலகளவில் 246 கோடி ரூபாய் வசூலித்தது. இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது மற்றொரு முன்னணி நடிகரிடம் கதை சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி அவர் தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவிடம் கதை சொல்லியதாகவும், அவருக்கு கதை பிடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஆதிக் - பாலகிருஷ்ணா கூட்டணி உருவாக அதிகம் வாய்ப்புள்ளது.
பாலகிருஷ்ணாவின் டாக்கு மகாராஜா
பாலகிருஷ்ணா கடைசியாக 'டாக்கு மகாராஜா' என்கிற படத்தில் நடித்திருந்தார். பாபி கொல்லி இயக்கிய இப்படம் இந்தியாவில் 107.84 கோடி ரூபாய் வசூலித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படத்தில், பாலகிருஷ்ணா மற்றும் உர்வசி ரவுடேலா இடையேயான நடனக் காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. சேகர் மாஸ்டர் கோரியோகிராபி செய்திருந்தார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரூபன் இசையமைத்திருந்தார்.
ஹாட்ரிக் ஹிட் கொடுத்த பாலகிருஷ்ணா
சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஸ்ரதா ஸ்ரீநாத், சாண்டினி சவுத்ரி, ரிஷி, நிதின் மேத்தா, ஆடுகளம் நரேன், ஷைன் டாம் சாக்கோ, ரவி கிஷன், சச்சின் கெடேகர், விவிவி கணேஷ், மகரந்த் தேஷ்பாண்டே, ஹர்ஷ் வர்தன், சந்தீப் ராஜ், திவ்யா வத்யா, ரவி காலே, சேகர், பாபி கொல்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். தெலுங்கில் தொடர்ச்சியாக அகண்டா, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி என மூன்று 100 கோடி வசூல் படங்களை கொடுத்தவர் பாலகிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.