- Home
- Cinema
- வெளிநாட்டில் தரமான சம்பவம் செய்ய உள்ள அஜித்... ஏ.கே.61 படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எந்த நாட்டில் தெரியுமா?
வெளிநாட்டில் தரமான சம்பவம் செய்ய உள்ள அஜித்... ஏ.கே.61 படத்தின் அடுத்தகட்ட ஷூட்டிங் எந்த நாட்டில் தெரியுமா?
AK 61 Update : எச்.வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சஞ்சய் தத் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித் நடிக்கும் 61-வது படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் உடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அங்கு பிரம்மாண்ட வங்கி செட் ஒன்று போடப்பட்டு அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.
வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளதாம். இதையடுத்து எஞ்சியுள்ள காட்சியை பூனே மற்றும் விசாகப்பட்டினத்தில் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்த வெளிநாட்டுக்கு செல்ல உள்ளார்களாம். அதன்படி பாங்காக்கிற்கு செல்ல உள்ள படக்குழு அங்கு அஜித் நடிக்க உள்ள ஆக்ஷன் காட்சியை படமாக்க உள்ளார்களாம்.
இதையும் படியுங்கள்... மகன் சிம்புவுக்கு பெண் கேட்டு போய்.. அசிங்கப்பட்டாரா டி.ராஜேந்தர்? என்ன ஆச்சு.. வெளியான அதிர்ச்சி தகவல்!
பாங்காக்கில் 21 நாட்கள் படப்பிடிப்பை நடத்த இயக்குனர் எச்.வினோத் திட்டமிட்டுள்ளாராம். அடுத்தவாரம் படக்குழுவினர் அனைவரும் பாங்காக் செல்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன் அஜித் - எச்.வினோத் கூட்டணியில் வெளியான வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் இதேபோல் தான் வெளிநாட்டில் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
varisu, AK61
ஏ.கே.61 படத்தை முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு இருந்தது. ஆனால் ஷூட்டிங் முடிய தாமதம் ஆனதால் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளார்களாம். இதன்மூலம் விஜய்யின் வாரிசு படத்துடன் நேரடி மோதலுக்கு அஜித் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... கீர்த்தி சுரேஷ் முதல் ஹரிஷ் கல்யாண் வரை... விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய சினிமா பிரபலங்களின் போட்டோஸ் இதோ