MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... ‘அஜித் - ஷாலினி’ ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நாள் இன்று

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... ‘அஜித் - ஷாலினி’ ரீல் ஜோடியாக இருந்து ரியல் ஜோடியாக மாறிய நாள் இன்று

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் காதல் ஜோடியான அஜித் - ஷாலினி இன்று தங்களது 23-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 24 2023, 08:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யார் என்று கேட்டால், யோசிக்காமல் முதலில் வாயில் வரும் பெயர் அஜித் - ஷாலினி தான். பிரபலங்கள் பலர் காதலித்து திருமணம் செய்துகொண்டு, பின்னர் விவாகரத்து பெற்று பிரிவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. காதலித்தால் மட்டும் போதாது கடைசி வரை சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்து வருகிறது அஜித் - ஷாலினி ஜோடி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அமர்க்களம் திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார். இவர்கள் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த திரைப்படமும் அதுதான். அப்போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது எப்படி என்பதைப் பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கப்போகிறோம்.

37

அமர்க்களம் திரைப்படத்தில் இடம்பெறும் ‘சொந்தக்குரலில் பாட’ என்கிற பாடலை நடிகை ஷாலினி தனது சொந்தக் குரலில் பாடி இருந்தார். படத்தின் ஷூட்டிங்கிற்கு முன்பே ரெக்கார்ட் செய்யப்பட்ட அந்த பாடலை கேட்டதும் அஜித்துக்கு மிகவும் பிடித்துப்போக தொடர்ந்து ரிப்பீட் மோடில் கேட்டுள்ளார் அஜித்.

இதையும் படியுங்கள்... குந்தவையாக நடிக்க திரிஷாவுக்கு கம்மி சம்பளம்... பொன்னியின் செல்வன் படத்திற்காக மொத்தமே இவ்வளவுதான் வாங்கினாரா?

47

அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்ற போது, சென்னையில் இருந்து ஊட்டிக்கு காரில் சென்றிருக்கிறார் அஜித். அப்போதிருந்த சாலை வசதிக்கு சென்னையில் இருந்து ஊட்டி செல்ல குறைந்தது 12 மணிநேரம் ஆகுமாம். ஆனால் அஜித்தோ 7 மணிநேரத்தில் வந்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

57

அஜித் காரில் வந்த அந்த 7 மணிநேரமும் ஷாலினி பாடிய சொந்தக்குரலில் பாட பாடலை கேட்டுக்கொண்டே வந்தாராம். அப்போதைய காலகட்டத்தில் லூப் மோடு ஆப்ஷன் இல்லை என்பதால், இயக்குனர் சரணிடம் கேட்டு அப்பாடலை கேசட்டில் 10 முறை பதிவு செய்து வாங்கியுள்ள அஜித், அதை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே சென்றாராம்.

67

அதேபோல் படப்பிடிப்பில் ஷாலினிக்கு அடிபட்டபோது துடிதுடித்துப் போய் இருக்கிறார் அஜித். தன் மீது அஜித் காட்டும் இந்த அக்கறையை பார்த்து ஷாலினியும் அஜித்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார். ஒருகட்டத்தில் ஷாலினியிடம் தன் காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் அஜித். இதற்கு ஷாலினியும் கிரீன் சிக்னல் காட்ட இருவரும் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

77

அஜித் ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது. 23 ஆண்டுகள் ஆனாலும், அன்றைப் போல் இன்றும் குறையாத காதலுடன் வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

இதையும் படியுங்கள்... அச்சு அசல் சமந்தா போலவே மாறிய தர்ஷா குப்தா.... சாகுந்தலம் கெட்-அப்பில் நடத்திய வேறலெவல் போட்டோஷூட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
80s in 2026 : 80-களின் ஹீரோயின்கள் 2026-ல் எப்படி இருப்பார்கள்? மாத்தி யோசி ப்ரோ!
Recommended image2
Low Budget Films: பட்ஜெட் கம்மி, வசூல் சும்மா தெறி! பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய 4 தெய்வீக படங்கள்
Recommended image3
Dorothy: டொராண்டோவில் தட்டித் தூக்கிய கார்த்திக் சுப்புராஜ் படம்! டோரதி-க்கு அசத்தல் வரவேற்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved