- Home
- Cinema
- பாக்ஸ் ஆபிஸ் ஒரு புது வியாதி... இவ்ளோ கலெக்ஷன்னு சொல்றது எதுவுமே உண்மை கிடையாது - எச்.வினோத்
பாக்ஸ் ஆபிஸ் ஒரு புது வியாதி... இவ்ளோ கலெக்ஷன்னு சொல்றது எதுவுமே உண்மை கிடையாது - எச்.வினோத்
பொங்கலுக்கு ரிலீசான அஜித்தின் துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் எச்.வினோத், தற்போது நடந்து வரும் பாக்ஸ் ஆபிஸ் மோதல் குறித்து மனம்திறந்து பேசி உள்ளார்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கிய படம் தான் துணிவு. அஜித் நாயகனாக நடித்திருந்த இப்படம் வங்கியில் நடக்கும் சுரண்டல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. பொங்கலுக்கு ரிலீசான இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் இயக்குனர் எச்.வினோத்.
அதில் அவர் கூறியதாவது : “பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் என்பது புது வியாதி. இந்த வியாதியை எல்லாரும் உடனே குணப்படுத்திக் கொள்வது நல்லது. இப்போ வருகிற பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எதுவுமே உண்மை கிடையாது. எல்லாமே ஒரு கணிப்பு தான். சரியான வசூல் நிலவரம் தெரியவர நேரம் ஆகும். அதில் சொல்லப்படும் தொகையில் 40 சதவீதம் கூட தயாரிப்பாளர்களுக்கு சென்று சேராது.
இதையும் படியுங்கள்... ஜெயிலர் ரஜினி பாணியில்... தனது அடுத்த படத்துக்காக வேறுமாநில சூப்பர்ஸ்டார்களை களமிறக்கும் கமல்ஹாசன்..?
ஷேர், ஜிஎஸ்டி, கமிஷன் என அந்த பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் நிறைய கணக்கீடுகள் இருக்கின்றன. இன்றைக்கு நிலவும் இந்த பாக்ஸ் ஆபிஸ் விளையாட்டுகளால் தயாரிப்பாளர்களே பொய் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை அந்த ஆட்டத்தையெல்லாம் விட்டுவிடுவது நல்லது” என கூறினார்.
ரியல் வின்னர் மற்றும் பொங்கல் வின்னர் என துணிவு மற்றும் வாரிசு பட நிறுவனங்கள் வெளியிட்ட போஸ்டர்கள் குறித்து எச்.வினோத் பதிலளித்து பேசியதாவது : “இந்த பொங்கலைப் பொறுத்தவரை ரிலீஸுக்கு முன் நான் என்னுடைய பேட்டிகளில் ரெண்டுமே ஜெயிக்கனும், ஹாப்பி எண்டிங் இருக்கனும்னு நினைச்சேன் அது நடந்திருக்கிறது. எனக்கு வந்த தகவல்படி ரெண்டு படங்களுமே நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது” என பதிலளித்தார்.
இதையும் படியுங்கள்... அதற்குள் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'வாரிசு' திரைப்படம்? எப்போது... வெளியான ரிலீஸ் தேதி!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.