MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இந்த பைக் ட்ரிப் வெறும் டிரைலர் தான்... இனி தான் ரியல் சம்பவமே இருக்கு - அஜித் போட்ட அல்டிமேட் பிளான்

இந்த பைக் ட்ரிப் வெறும் டிரைலர் தான்... இனி தான் ரியல் சம்பவமே இருக்கு - அஜித் போட்ட அல்டிமேட் பிளான்

Ajith Bike Trip : தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் கடந்த 2 நாட்களாக பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

1 Min read
Author : Ganesh A
Published : Jun 20 2022, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித், பைக் ரேஸ், கார் ரேஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். பெரும்பாலும் இவர் நடிக்கும் படங்களில் இடம்பெறும் பைக் அல்லது கார் ஸ்டண்ட் காட்சிகளை டூப் போடாமல் அசால்டாக செய்து அசத்துவதில் வல்லவராகவும் இருந்து வருகிறார் அஜித்.

24

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் கூட பைக் சேஸிங் காட்சியின் போது விபத்தில் சிக்கியபோதும் உடனடியாக எழுந்துவந்து மீண்டு அந்த சீனில் நடித்து முடித்துக்கொடுத்தார். இவர் நடிப்பில் தற்போது ஏகே 61 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் நடிகர் அஜித்துக்கு சில நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

34

ரெஸ்ட் கிடைத்ததும் உடனடியாக பைக்கை எடுத்துக் கொண்டு பாரினுக்கு கிளம்பி விட்டார் அஜித். அவர் தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா நாடுகளில் கடந்த 2 நாட்களாக பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

44

இந்நிலையில், இந்த பைக் ட்ரிப் வெறும் ஒத்திகை தான் என தெரியவந்துள்ளது. வருகிற ஆக்ஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு பைக்கில் செல்ல திட்டமிட்டுள்ள அஜித் அதற்கான ஒத்திகையை தற்போது பார்த்து வருகிறாராம். ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பைக்கில் உலக சுற்றுலா செல்ல உள்ள அஜித், அதனை முடித்த பின் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே62 படத்தில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Rajinikanth Salary : ரூ.100 கோடி பத்தாது... ஜெயிலர் படத்துக்காக சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய ரஜினி

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு வந்த குட்டி மகாலட்சுமி! பெண் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் நெகிழ்ந்து போன நடிகர்!
Recommended image2
தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! 'கர' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – கோடை விடுமுறையில் அதிரடி வேட்டை
Recommended image3
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரகசியம்: சூர்யா கையில் இருக்கும் குழந்தைக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? பர்ஸ்ட் லுக் தரும் ஷாக்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved