MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் வாழ்க, விஜய் வாழ்கனு சொல்லிக்கிட்டே இருந்தால் நீங்க எப்போ வாழ போறீங்க: அஜித் கேள்வி!

அஜித் வாழ்க, விஜய் வாழ்கனு சொல்லிக்கிட்டே இருந்தால் நீங்க எப்போ வாழ போறீங்க: அஜித் கேள்வி!

Ajith Asks His Fans When Will You Live : அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழ போறீங்க என்று நடிகர் அஜித் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

3 Min read
Author : Rsiva kumar
Published : Jan 14 2025, 07:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Ajith Asks His Fans When Will You Live

Ajith Asks His Fans When Will You Live

Ajith Asks His Fans When Will You Live : பைக் மற்றும் கார் ரேஸ் மீது காதல் கொண்டு காதல் மன்னனாக திகழும் நடிகர் அஜித் குமார் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு 3ஆவது இடம் பிடுத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்து கொடுத்துள்ளார். 24ஹெச் சீரிஸ் தொடரில் அஜித் குமார் தலைமையிலான அணி கலந்து கொண்டு 991 பிரிவில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Ajithkumar, Ajith Car Race Accident

Ajithkumar, Ajith Car Race Accident

ஒரு நடிகராக இருந்து கார் ரேஸில் சாதனை படைப்பது இதுவே முதல் முறை. சினிமாவில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அடுத்தடுத்து படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால், தனது கனவான கார் ரேஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு இதைவிட பெரிய சந்தோஷம் என்று எதுவும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்திய நாட்டு தேசிய கொடியை கையில் வைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து வெற்றியை கொண்டாடினார்.

37
Ajith Dubai Car Race Video, Ajith Winning Movement

Ajith Dubai Car Race Video, Ajith Winning Movement

ஒட்டு மொத்த உலகமே கொண்டாடும் வகையில் மகத்தான சாதனையை நிகழ்த்தினார். போட்டிக்கு முன்னதாக அவர் மேற்கொண்ட பயிற்சியின் போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. இதில் எந்தவித காயமும் இல்லாமல் தப்பினார். இதையடுத்து இந்தப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்று அறிவித்தார். ஆனால், அறிவித்து கொஞ்ச நேரத்திலேயே கார் ரேஸில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதில் அடுத்தடுத்த இடத்திற்கு முன்னேறிய அஜித் கடைசியில் 3ஆவது இடம் பிடித்தார்.

47
Shalini Ajith Kumar, Ajith Kumar Family

Shalini Ajith Kumar, Ajith Kumar Family

இந்த வெற்றியை தனது குடும்பத்தோடு உற்சாகமாக கொண்டாடினார். மேலும், மனைவி ஷாலினிக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். நடிகர் மாதவன் நேரில் சென்று அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து சினிமா பிரபலங்கள் பலரும் அஜித்துக்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதில் சிவகார்த்திகேயன், கார்த்திக் சுப்புராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் வசந்த், விக்ரம் பிரபு என்று பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கார் ரேஸில் சாதனை – சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்று மனைவிக்கு லிப் டூ லிப் கிஸ் அடித்த அஜித்!

57
Ajith Asks His Fans When Will You Live

Ajith Asks His Fans When Will You Live

இவ்வளவு ஏன், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யும் தனது கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிலையில் தான் அஜித் குமார் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், படங்கள் பார்ப்பது கொண்டாடுவது எல்லாம் சரி தான். ஆனால், அஜித் வாழ்க, விஜய் வாழ்க என்று சொல்லிக் கொண்டே இருந்தால் நீங்கள் எப்போது வாழ போறீங்க. நீங்கள் கொடுக்கும் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. ஆனால், நீங்கள் எப்போது வாழ்வீங்க. வாழ்க்கை சிறியது. இந்த நாளுக்காக வாழுங்கள். என் ரசிகர்கள் வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

67
Dubai Car Race, Ajith Speech, Ajith Kumar Video

Dubai Car Race, Ajith Speech, Ajith Kumar Video

மற்றொரு வீடியோவில் கடினமாகவும், நேர்மையாகவும் உழைக்க வேண்டும். உங்களையும், உங்களது குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டும். நன்றாக படிக்க வேண்டும், நல்ல வேலையில் சேர வேண்டும் என்று கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் அஜித்தை கடவுளே அஜித் கடவுளே அஜித் என்று ரசிகர்கள் கோஷம் எழுப்பி வந்த நிலையில் அது தொடர்பாகவும் அஜித் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதன்படி, இனிமேல் யாரும் தன்னை கடவுளே அஜித் என்று அழைக்க வேண்டாம். அஜித் அல்லது அஜித் குமார் அல்லது ஏகே என்று அழைத்தால் போதும் என்று கூறியிருந்தார்.

77
Ajith Kumar, Ajith, Ajith Car Race

Ajith Kumar, Ajith, Ajith Car Race

அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி மற்றும் விடாமுயற்சி ஆகிய 2 படங்களுமே இந்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. இதில் விடாமுயற்சி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் அறிவித்தபடி வெளியாகவில்லை. விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. எப்படியும் கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மினி கோடம்பாக்கமாக மாறிய துபாய்! அஜித்தின் கார் ரேஸை பார்க்க படையெடுத்து வந்த கோலிவுட்!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அஜித் கார் பந்தயம்
அஜித் குமார்
ஷாலினி அஜித் குமார்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved