- Home
- Cinema
- கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அஜித்குமார்..! முதன் முறையாக மனம் திறந்த AK வைரல் பேட்டி!
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாக பேசிய அஜித்குமார்..! முதன் முறையாக மனம் திறந்த AK வைரல் பேட்டி!
Ajith Supports Vijay in Viral Karur Stampede Interview: கரூர் கூட்ட நெரிசல் குறித்து நடிகரும், ரேஸருமான அஜித்குமார் பேசிய பேட்டி வைரலாகி வருகிறது. கரூர் சம்பவத்தில் அஜித்குமார், விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்
கரூரில் நடிகரும், தவெக தலைவரும் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்காததும், செந்தில் பாலாஜியின் சதியே காரணம் என தவெகவினர் குற்றம்சாட்டுகின்றனர். அதே வேளையில் விஜய் தாமதமாக வந்ததே விபத்துக்கு காரணம் எனவும் காவல்துறை அறிவுரைகளை தவெக தலைவர்கள் ஏற்கவில்லை எனவும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
விஜய்க்கு ஆதரவாக, எதிராக கருத்து
இந்த சம்பவத்தை தொடர்ந்து விஜய் கரூர் செல்லாததும், பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரம் அழைத்து வந்து ஆறுதல் தெரிவித்ததும் பெரும் விமர்சனத்துக்கு வழிவகுத்தன. தமிழ் திரையுலகை பொறுத்தவரை கரூர் விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக ஒரு சிலரும், எதிராக ஒரு சிலரும் உள்ளனர். இந்நிலையில், தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ரேஸருமான அஜித்குமார், கரூர் சம்பவம் குறித்து முதன் முறையாக கருத்து கூறியது வைரலாக பரவி வருகிறது.
கரூர் சம்பவம் குறித்து பேசிய அஜித்குமார்
அதாவது அஜித்குமார் நீண்ட இடைவெளிக்கு பிறகு அளித்திருக்கும் பேட்டியில், ''தமிழ்நாட்டில் கூட்ட நெரிசல் தொடர்பாக பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இதற்கு அந்த தனி நபர் (விஜய்) மட்டும் பொறுப்பல்ல. நாம் எல்லோரும் தான் இதற்கு பொறுப்பு. மீடியாவும் தான் இதற்கு பொறுப்பு. இது ஒரு கூட்டு தோல்வியாகும். நானும் கூட தான் இதற்கு பொறுப்பு. ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல.
கூட்டம் சேர்வது முடிவுக்கு வர வேண்டும்
நமது சமுதாயம் நிறைய மாறி விட்டது. உங்கள் செல்வாக்கைக் காட்ட ஒரு கூட்டத்தை ஒன்று சேர்ப்பது முடிவுக்கு வர வேண்டும். கிரிக்கெட் பார்க்க கூட்டம் வருகிறது. ஆனால் அங்கு இப்படி நடப்பதில்லை. தியேட்டரில் முதல் காட்சி. பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் மட்டும் இப்படி நடக்கிறது.
இது திரையுலகை தவறாக காட்டுகிறது. ரசிகர்கள் அன்புக்காக நாங்கள் உழைக்கிறோம். ஆனால் உயிரை பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டும். முதல் நாள் காட்சி கலாசாரத்தை ஆதரிப்பது சரியான விஷயம் அல்ல'' என்று தெரிவித்தார். அஜித்குமாரின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது.