- Home
- Cinema
- அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் குட் பேட் அக்லி – டீசரில் இவ்வளவு விஷயம் இருக்கா?
அஜித்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தும் குட் பேட் அக்லி – டீசரில் இவ்வளவு விஷயம் இருக்கா?
Ajith Kumar Good Bad Ugly Teaser Hidden Secrets in Tamil : அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில் டீசரில் மறைந்திருக்கும் விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

Ajith Kumar Good Bad Ugly Teaser Hidden Secrets in Tamil : அஜித் குமார் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த விடாமுயற்சி போதுமான வரவேற்பு பெறவில்லை. கலவையான விமர்சனம் பெற்ற நிலையில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.138 கோடி வசூல் குவித்து தோல்வி படமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக விடாமுயற்சி படத்திற்கு பிறகு வரக் கூடிய குட் பேட் அக்லீ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த எதிர்பார்ப்பு குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியான நிலையில் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் குட் பேட் அக்லீ டீசர் தான்.
Good Bad Ugly Teaser Hidden Secrets
ஒரு அஜித் ரசிகராக இருந்து கொண்டு அஜித்திற்காகவும், அவரது ரசிகர்களுக்காகவும் உருவாக்கப்பட்ட படம் போன்று குட் பேட் அக்லீ படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இதுவரையில் அஜித் நடிப்பில் இப்படியொரு படம் வந்திருக்குமா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு குட் பேட் அக்லீ படம் இருக்கும் என்று இப்போதே தெரிகிறது. ஏனென்றால் டீசர் அப்படி. பட்டிதொட்டியெங்கும் குட் பேட் அக்லீ படத்தின் டீசரைத் தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Ajith Kumar Good Bad Ugly Teaser
டீசர் அஜித் பேசக் கூடிய டயலாக்குகளை எடுத்து ஷார்ட்ஸ் வீடியோவாக பதிவிட்டு வருகிறார்கள். டீசரில் ஆரம்பிக்கும் போதே கேஜிஎஃப் பட ஸ்டைலில் தொடங்குகிறது. ஏகே ஒரு ரெட் டிராகன், அவன் போட்ட ரூல்ஸை அவனே பிரேக் பண்ணிட்டு வந்திருக்கான். நாம் எவ்வளவு தான் Good ஆக இருந்தாலும் இந்த உலகம் நம்மை Bad ஆக்குது. காட்டுறேன்..வாழ்க்கையில் என்னெல்லாம் பண்ண கூடாதோ, சில சமயங்களில் அதெல்லாம் பண்ணனும் பேபி. அது…My Darlings Missed You All என்று அஜித் வசனம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
Ajiths Good Bad Ugly
அதோடு அஜித் இதுவரையில் நடித்த படங்களான தீனா, வேதாளம், ரெட், அசல், மங்காத்தா போன்ற படங்களின் தோற்றங்களும் குட் பேட் அக்லீ படத்தின் டீசரில் இடம் பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி முக்கியமான ஒரு விஷயம், என்னன்வென்றால், இது அஜித்தின் 63ஆவது படம் என்பதால் ஏகே ரெட் டிராகன் காரில் MH05AK63 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 05 என்பது அஜித் பிறந்த மாதமாக கூட இருக்கலாம்.
Ajith Kumar Good Bad Ugly Release Date
ரெட் படத்தின் டயலாக், வேதாளம் படத்தின் சிக்னேச்சர் ஸ்டைல், விளையாடு மங்காத்தா சாங் ஸ்டெப் என்று முழுக்க முழுக்க அஜித் மற்றும் அவரது ரசிகர்களுக்கான படமாகவே இந்த படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர். முதலில் இப்படியொரு டீசர் கொடுத்த இயக்குநருக்கு பாராட்டுக்கள். அஜித்தின் குட் பேட் அக்லீ வரும் ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. பொதுவாகவே அஜித் படங்கள் எல்லாம் வியாழக்கிழமையில் தான் அப்டேட் வரும். ஆனால், இந்த டீசர் வெள்ளிக்கிழமையில் வெளியாகியிருக்கிறது. இருந்தபோதிலும் படம் வியாழக்கிழமையில் தான் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Good Bad Ugly Teaser Hidden Secrets in Tamil
அஜித் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ரூ.270 கோடி பட்ஜெட்டில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. குட் பேட் அக்லீ படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இந்தபடத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ.95 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. குட் பேட் அக்லீ படத்தின் டீசர் வெளியாகி யூடியூப்பில் 14 மணி நேரத்தில் 18 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் 6 லட்சத்திற்கும் அதிகமாகவே லைக்ஸ் பெற்றுள்ளது. விடாமுயற்சி படத்தின் ஓடிடி உரிமையை ரூ.100 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. வரும் 3ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஓடிடியில் விடாமுயற்சி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.