'துணிவு' படத்திற்காக மஞ்சு வாரியருக்கு ஜெட் ஸ்கை பயிற்சி கொடுத்த அஜித்..! அவரே பகிர்துகொண்ட தகவல்!
'துணிவு' படப்பிடிப்பின் போது நடிகை மஞ்சுவாரியருக்கு, அஜித் ஜெட் ஸ்கை சொல்லிக் கொடுத்ததாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Ajit
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித், 'நேர்கொண்ட பார்வை' மற்றும் 'வலிமை' ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம், 'துணிவு'. அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பேங்க் கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், கிட்ட தட்ட பிரபல ஹாலிவுட் வெப் தொடரான... 'மனி ஹெய்ஸ்ட்' தொடரை போன்று உள்ளதாகவும், அதே போல் சில காட்சிகள் 'பீஸ்ட்' படத்துடன் ஒத்துப்போவதாக இந்த படத்தின் ட்ரைலர் வெளியான போது விமர்சனங்கள் எழுந்தது.
படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் படு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஜித்தின் எந்த படங்களுக்கும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இல்லை என்பதால்... மாறாக, துணிவு படத்தின் போஸ்ட்டரை கார், வேன், மற்றும் ஸ்கை டைவிங் மூலம் வானில் பறந்து என... பல்வேறு விதத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'துணிவு' படத்தில் நடித்துள்ள நடிகை மஞ்சு வாரியர்... இந்த படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து, பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் பேசியுள்ளார். அப்போது தொகுப்பாளர் மஞ்சு வாரியரிடம் 'துணிவு' படத்தில் ஜெட் ஸ்கை காட்சிகள் இடம் இடப்பெற்றிருந்தது. அஜித் மற்றும் நீங்கள் ஜெட் ஸ்கை செய்வது போல் எடுக்கப்பட்டது... டூப் போட்டு எடுக்கப்பட்டதாக பல்வேறு விமர்சனங்கள் வந்தது, எனவே அந்தக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பதை நீங்களே கூறுங்கள் என தெரிவித்தார்.
8 வருட காத்திருப்புக்கு பின்பெற்றோரான சரவணன் மீனாட்சி சீரியல் செந்தில் - ஸ்ரீஜா! குவியும் வாழ்த்து!
இதற்கு மஞ்சு வாரியர் அஜித் எவ்வித டூப்பும் பயன்படுத்தாமல் தான் இந்த காட்சிகள் நடித்தார். ஆனால் நான் முதல் முறையாக இது போன்ற காட்சியில் நடித்தேன். அவர் தான் எனக்கு ஜெட் ஸ்கை செய்த சொல்லிக்கொடுத்தார். இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை மஞ்சு வாரியார் சமீபத்தில் கூட அஜீத் இமயமலை பகுதியில் பைக் ரெய்டு சென்றபோது, அவருடன் சிறிது தூரம் பைக் பயணம் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் மஞ்சுவாரியர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி சீரியல் அம்மா நடிகைக்கு 45 வயதில் மறுமணமா? அவரே வெளியிட்ட பரபரப்பு தகவல்!