ஹீரோவுக்கு மவுசு இல்லாததால்... மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம்? அதுவும் இந்த டாப் நடிகருடனா...!
நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது அவர் மீண்டும் காமெடியனாக கம்பேக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக கலக்கி வந்தவர் சந்தானம். இவர் சினிமாவில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே விஜய், அஜித், ரஜினி, சூர்யா என கோலிவுட்டில் உள்ள பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார். வடிவேலு ரேஞ்சுக்கு மிகப்பெரிய உயரத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தான் ஹீரோவாக நடிக்க கிளம்பிவிட்டார் சந்தானம்.
இவர் ஹீரோவாக நடித்த சில படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதால், இனி ஹீரோவாக மட்டும் தான் நடிப்பேன் என முடிவெடுத்த சந்தானம், காமெடி வேடங்களுக்கு குட் பாய் சொல்லிவிட்டு முழுநேர ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.
இதையும் படியுங்கள்... நெல்சா வேறமாறி... வேறமாறி... ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த மற்றுமொரு சூப்பர்ஸ்டார்...!
இந்த படங்கள் மூலம் ஹீரோவாக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சந்தானம், அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுத்ததால், அவரது ஆசையெல்லாம் தவிடுபொடி ஆனது. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த டகால்டி, பிஸ்கோத், டிக்கிலோனா, குலுகுலு, பாரிஸ் ஜெயராஜ், ஏஜண்ட் கண்ணாயிரம், சபாபதி ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன.
இதனால் அவர் மீண்டும் காமெடியனாக களமிறங்க உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அதுகுறித்த மேலும் ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி சந்தானம் அஜித்தின் ஏகே 62 படம் மூலம் காமெடியனாக கம்பேக் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்க உள்ளார். இதன் ஷூட்டிங் வருகிற ஜனவரி 17-ந் தேதி தொடங்க உள்ளது. நடிகர் சந்தானம் ஏற்கனவே அஜித் உடன் கிரீடம், பில்லா, வீரம் போன்ற படங்களில் நடித்திருந்தாலும், அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ‘துணிவு - வாரிசு’க்கு முன்... 6 முறை நேருக்கு நேர் மோதிய ‘விஜய் - அஜித்’ படங்கள் - அதில் அதிக வெற்றி யாருக்கு?