கோலிவுட்டில் டிரெண்ட் செட்டராக மாறப்போகும் அஜித்தின் குட் பேட் அக்லி! காரணம் என்ன?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் கோலிவுட்டில் ஒரு டிரெண்ட் செட்டராக மாற இருக்கிறது.

கோலிவுட்டில் FDFSக்கு தடை
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரின் படங்களுக்கு அதிகாலை காட்சிகள் மிகப்பெரிய வருவாயை ஈட்டிக் கொடுத்து வந்தன. ஆனால் கடந்த 2023-ம் ஆண்டு விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனபோது அதன் அதிகாலை காட்சிக்காக தியேட்டர் முன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் லாரியின் மீதிருந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ப்ரீமியர் ஷோ
அந்த சம்பவத்துக்கு பின்னர் தமிழ்நாட்டில் எந்த நடிகரின் படத்துக்கும் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை. இதன் காரணாமாக முன்னணி நடிகர்களின் முதல் நாள் வசூல் கணிசமாக குறைந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு விரைவில் புதிதாக ஒரு டிரெண்ட் கோலிவுட்டில் உருவாக உள்ளது. அது என்னவென்றால் நாளை படம் ரிலீஸ் ஆகிறது என்றால் அதன் ப்ரீமியர் காட்சியை முந்தைய நாள் இரவே திரையிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... ஓட்டப்பந்தயத்தில் சிங்கம் போல் சீறிப்பாய்ந்த அஜித் மகன்; 3 தங்க மெடல்கள் வென்று அசத்தல்
டிரெண்ட் செட்டராக மாறும் அஜித்
இதன்மூலம் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ப்ரீமியர் ஷோ திரையிடும் நடைமுறை வருகிற ஏப்ரல் மாதம் முதல் பின்பற்றப்பட உள்ளதாம். அதிலும் முன்னோடியாக அஜித் தான் இந்த டிரெண்டை தொடங்கி வைக்க இருக்கிறார். அவர் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் ப்ரீமியர் ஷோவை வருகிற ஏப்ரல் 9ந் தேதி இரவு திரையிட திட்டமிட்டிருக்கிறார்களாம். அதன்பின்னர் மற்ற நடிகர்களும் அந்த டிரெண்டை பாலோ செய்ய வாய்ப்புள்ளது.
குட் பேட் அக்லிக்கு ப்ரீமியர் ஷோ
இதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு வெளிவந்த சூர்யாவின் ஏழாம் அறிவு படத்திற்காக ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் அதற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் அதை கைவிட்டனர். ஆனால் தற்போதைய கால சூழலில் ப்ரீமியர் ஷோக்களுக்கு மற்ற மொழிகளில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதால், அதை தமிழ்நாட்டிலும் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு எந்த அளவு வரவேற்பு உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ஜனவரி 31ந் தேதி தியேட்டர் & OTTயில் போட்டிபோட்டு ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ