- Home
- Cinema
- Good Bad Ugly Box Office: அட்ரா சக்க 2 நாளில் இத்தனை கோடி வசூலா? மாஸ் காட்டும் அஜித்தின் 'குட் பேட் அக்லி'!
Good Bad Ugly Box Office: அட்ரா சக்க 2 நாளில் இத்தனை கோடி வசூலா? மாஸ் காட்டும் அஜித்தின் 'குட் பேட் அக்லி'!
அஜித் நடிப்பில், நேற்று முன் தினம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன, 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Vidamuyarchi
ஏமாற்றிய விடாமுயற்சி:
அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன 'விடாமுயற்சி' திரைப்படம் அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன நிலையில், முதல் நாளே கலவையான விமர்சனங்களை பெற துவங்கியது. இதன் தாக்கம் படத்தின் வசூலை அதிகம் பாதித்தது. 2 வாரங்கள் திரையரங்கில் ஓடிய போதிலும், ஒட்டு மொத்தமாக ரூ.135 கோடி மட்டுமே வசூல் செய்தது. ரசிகர்களும் படம் குறித்த தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.
Thalapathy Fans Celebrate Good Bad Ugly
தளபதி ரசிகர்களும் இந்த படத்தை கொண்டாடி வருகிறார்கள்:
இதை தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் - அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' திரைப்படம், ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆன நிலையில்... படம் தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. கோலிவுட் திரையுலகின் புது முயற்சியாக பார்க்கப்படும் இந்த படத்தை, தல ரசிகர்கள் மட்டும் அல்ல தளபதி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக், இந்த படத்தை ஒரு ஃபேன் பாய் படமாகவே இயக்கி உள்ளது தான் இப்படத்தின் மிகப்பெரிய பிளஸ்சாக பார்க்கப்படுகிறது. முதல் பிரேமில் இருந்து கடைசி வரை திரைக்கதையில் மிரட்டி இருக்கிறார் ஆதிக்.
குட் பேட் அக்லியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ரசிகர்கள்; ஆனா அஜித் ரியாக்ஷன் என்ன?
Good Bad Ugly Cast:
குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் :
இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக, த்ரிஷா நடித்துள்ள நிலையில், வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். மேலும் சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு, சிம்ரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளது. மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் முதல் நாள் தமிழக வசூல் நேற்று மாலை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Good Bad Ugly Day 2 Collection
2-ஆவது நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல் :
அதன்படி, 'குட் பேட் அக்லி' திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.30.09 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதை தொடந்து, இப்படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் உலக அளவில் இரண்டாவது நாளிலேயே சுமார் 100 கோடி வசூலை எட்டி உள்ளது. அதாவது இரண்டாவது நாளில் உலகம் முழுவதும் ரூ.90 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம். இந்த தகவல் படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இதை தொடர்ந்து 3 நாட்கள் தொடர் விடுமுறை வர உள்ளதால்... குட் பேட் அக்லி ரூ.300 கோடி வசூல் கிளப்பில் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
தளபதியின் 'கோட்' பட வசூலை சல்லி சல்லியால் நொறுக்கிய 'குட் பேட் அக்லி' வசூல்! அதிகார பூர்வ அறிவிப்பு!