MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பரிதாப நிலையில் வாட்ச்மேன் வேலை செய்யும் அஜித் பட நடிகர்!

பரிதாப நிலையில் வாட்ச்மேன் வேலை செய்யும் அஜித் பட நடிகர்!

அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தன்னுடைய வயிற்று பிழைப்புக்காக வாட்ச்மேன் வேலை செய்து வருவதாக கூறியுள்ள தகவல் வைரனாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 29 2025, 12:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நினைத்தது போல் வாய்ப்புகள் கிடைப்பது இல்லை:

சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடித்தட்டில் கிடந்தவரை கூட சினிமா உச்சத்தில் வைத்து, அழகு பார்த்தது உண்டு. 

26
Successful Actors in Tamil Cinema:

Successful Actors in Tamil Cinema:

சினிமா பின்னணி இன்றி உயர்ந்த நட்சத்திரங்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் காமெடி நடிகர் சூரி வரை இப்படி எந்த ஒரு சினிமா பின் புலம்பும் இல்லாமல், இன்று முன்னணி நட்சத்திரங்களாக மாறி உள்ளனர். அதேபோல் நடிகர் அஜித்தும், எந்த ஒரு சினிமா பின்னணியும் இன்றி திரையுலகில் அறிமுகமாகி தன்னுடைய திறமையால்  உயர்ந்தவர் தான். ஒரு நடிகர் என்பதை தாண்டி விளையாட்டு துறையிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். 

பத்ம பூஷன் விருது வென்ற கையோடு கண்டனம் தெரிவித்த அஜித் - என்ன விஷயம்?

36
Padma Bhushan Ajith:

Padma Bhushan Ajith:

நடிகர் அஜித்:

கார் ரேஸ்ஸில் கலந்து கொண்டு தன்னுடைய சிறப்பான பங்களிப்பால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள  அஜித்தை கௌரவிக்கும் விதமாக, பத்மபூஷன் விருதை இந்த ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு  அறிவித்தது மத்திய அரசு. நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விருது விழாவில், அஜித் தன்னுடைய குடும்பத்தோடு சென்று இந்த விருதை பெற்றுக் கொண்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில்  வெளியாகி வைரலாகி வருவதோடு வாழ்த்துக்களும் குவிந்துள்ளது.

46
Aarambam Movie Actor Savi Sindhu:

Aarambam Movie Actor Savi Sindhu:

'ஆரம்பம்' பட நடிகர் சவி சிந்து: 

இந்நிலையில் நடிகர் அஜித் நடித்த திரைப்படத்தில் பணியாற்றிய பிரபலம் ஒருவரின் பரிதாப நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  "2013 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆரம்பம்'. இந்த படத்தில் தீவிரவாத குழுவை சேர்ந்த நபர்களில் ஒருவராக நடித்தவர் சவி சிந்து. லக்னோவை பூர்வீகமாகக் கொண்ட இவர், சட்டம் படித்த நிலையில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக நடிப்பில் தன்னுடைய கவனத்தை செலுத்த துவங்கினார்.

பெயரை குறிப்பிடாமல் அஜித் மீது குற்றம்சாட்டிய முன்னாள் காதலி: போதைக்கு அடிமையாகவில்லை - ஹீரா

56
Watch Man Work

Watch Man Work

வாட்மேனாக வேலை செய்து வருகிறார்:

ஆனால் இவருக்கு நினைத்தது போல் பட வாய்ப்புகள் அமையவில்லை. ஒரு கட்டத்தில் இவருடைய குடும்பத்தினரே இவரை விட்டு விலகிய நிலையில், தற்போது தன்னுடைய அன்றாட வயிற்றுப் பிழைப்புக்காக வாட்மேனாக வேலை செய்து வருகிறார். இந்த தகவலை கூறியுள்ள சவி சிந்து தனக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

66
Savi Sindhu Acting Bollywood Movies:

Savi Sindhu Acting Bollywood Movies:

பாலிவுட் படங்களில் நடித்துள்ளார்:

சவி சிந்து 'ஆரம்பம்' படம் மட்டுமல்லாது, பல பாலிவுட் படங்களிலும் சிறு சிறு  வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் இவருடைய கதாபாத்திரங்கள் எதுவும் அதிகம் பேசப்படவில்லை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வாட்ச்மேன் வேலை செய்தாலும், தன்னால் தன்னுடைய அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியவில்லை என்றும், தனக்கு படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் தன்னுடைய வருமானத்தை வைத்து எந்த ஒரு தியேட்டருக்கும் தன்னால் செல்ல முடியவில்லை. அதற்கான பணமும் என்னிடம் கிடையாது என கூறியுள்ளார். இவருக்கு பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த பிரபலங்கள் கை கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கினார் திரெளபதி முர்மு! தலைநகரில் ‘தல’க்கு கிடைத்த அங்கீகாரம்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
பாலிவுட்
அஜித் குமார்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா பெற்றோர் போட்ட கண்டிஷன்... கல்யாணத்துக்கு முன்பே இப்படியா?
Recommended image2
நிறுத்தப்படும் குமரவேல் கல்யாணம்... மீனாவிடம் குட் நியூஸ் சொன்ன தங்கமயில் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image3
பாடும் நிலா SPB-யின் தேன் குரல்.! கேட்பவர்களை மெய் மறக்க செய்யும் டாப் 10 சூப்பர் ஹிட் சாங்ஸ் லிஸ்ட் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved