- Home
- Cinema
- Aishwaryaa Rajinikanth : ‘வாவ் செல்வா அத்தான்’ செல்வராகவன் போட்டோ பார்த்து மெர்சலான ஐஸ்வர்யா- வைரலாகும் பதிவு
Aishwaryaa Rajinikanth : ‘வாவ் செல்வா அத்தான்’ செல்வராகவன் போட்டோ பார்த்து மெர்சலான ஐஸ்வர்யா- வைரலாகும் பதிவு
Aishwaryaa Rajinikanth : தனுஷை விட்டு பிரிந்தாலும், அவரது குடும்பத்தினர் மீது ஐஸ்வர்யா வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் பார்த்து தனுஷ் ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர்.

இயக்குனராக ஜொலித்த ஐஸ்வர்யா
தமிழ் சினிமாவில்ல் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யாவும் சினிமாவில் இயக்குனராக ஜொலித்து வருகிறார். இவர் இதுவரை தனுஷின் 3 மற்றும் கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி உள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷை லவ் பண்ணி கல்யாணம் பண்ணினார் ஐஸ்வர்யா. இத்தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு அழகான ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தனுஷுடன் கருத்துவேறுபாடு
18 ஆண்டுகள் நீடித்து வந்த இவர்களது திருமண வாழ்க்கை அண்மையில் முடிவுக்கு வந்தது. கடந்த ஜனவரி மாதம் இருவரும் திடீரென தங்களது சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தாங்கள் விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்தனர். இவர்களது இந்த திடீர் அறிவிப்பு கோலிவுட்டையே பரபரப்பாக்கியது. பின்னர் இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் இறங்கினர்.
முசாபிர் மியூசிக் வீடியோ
அதன் பலனாக விவாகரத்து செய்யும் முடிவை நடிகர் தனுஷ் கைவிட்டாலும், ஐஸ்வர்யாவுடன் சேர்ந்து வாழப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். மறுபுறம் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் முசாபிர் என்கிற மியூசிக் வீடியோ ஒன்றை இயக்கி வந்தார். அண்மையில் வெளியான அந்த வீடியோ ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
தனுஷ் குடும்பத்தின் மீது தொடரும் அன்பு
இந்நிலையில், தனுஷை விட்டு பிரிந்தாலும், அவரது குடும்பத்தினர் மீது ஐஸ்வர்யா வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் பார்த்து தனுஷ் ரசிகர்கள் நெகிழ்ந்து போயுள்ளனர். தனுஷின் அண்ணனும், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவருமான செல்வராகவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் நடித்துள்ள சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
செல்வா அத்தான்
இந்த புகைப்படத்திற்கு ஐஸ்வர்யா பதிவிட்டுள்ள கமெண்ட் தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. அதன்படி ‘வாவ்... செல்வா அத்தான்’ என பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. அவரின் இந்த கமெண்ட்டுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதைப்பார்த்த தனுஷ் ரசிகர்கள், இதேபோல் தனுஷையும் அழைத்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். செல்வராகவன் நடித்துள்ள சாணிக்காயிதம் படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Etharkkum Thunindhavan :இரண்டரை ஆண்டுகளுக்கு பின் தியேட்டரில் ரிலீசான சூர்யா படம்! அதகளப்படுத்தும் அன்பான Fans