- Home
- Cinema
- Etharkkum Thunindhavan :இரண்டரை ஆண்டுகளுக்கு பின் தியேட்டரில் ரிலீசான சூர்யா படம்! அதகளப்படுத்தும் அன்பான Fans
Etharkkum Thunindhavan :இரண்டரை ஆண்டுகளுக்கு பின் தியேட்டரில் ரிலீசான சூர்யா படம்! அதகளப்படுத்தும் அன்பான Fans
Etharkkum Thunindhavan : நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யாவின் படம் திரையரங்கில் ரிலீசாவதால், அதிகாலை முதலே தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், நடிகர் சூர்யாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர்.

சூர்யா - பாண்டிராஜ் கூட்டணி
தமிழ் திரையுலகில் சக்சஸ்ஃபுல் டைரக்டராக வலம்வருபவர் பாண்டிராஜ். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘எதற்கும் துணிந்தவன்’. இப்படத்தில் நடிகர் சூர்யா (suriya) கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான பசங்க 2 படத்தில் நடித்திருந்தார். தற்போது இரண்டாவது முறையாக அவருடன் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளார்.
எதற்கும் துணிந்தவன் டீம்
இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட ஹீரோயின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் திவ்யா துரைசாமி, புகழ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்சினி, சத்யராஜ், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் வினய் வில்லனாகவும், சூரி நகைச்சுவை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ரிலீஸ்
கடந்த இரண்டரை ஆண்டுகளாக நடிகர் சூர்யா நடித்த படங்கள் எதுவும் திரையரங்கில் வெளியாகவில்லை. அதற்கு மாறாக சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இந்நிலையில், தற்போது சூர்யா படத்தை திரையரங்கில் காண ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விதமாக இன்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
நீண்ட இடைவெளிக்கு பின் சூர்யாவின் படம் திரையரங்கில் ரிலீசாவதால், அதிகாலை முதலே தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்தும், நடிகர் சூர்யாவின் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடி வருகின்றனர். இப்படம் தமிழ் தவிர மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் இன்று வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... Actor suriya : எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பாமக எதிர்ப்பு எதிரொலி... சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு