Actor suriya : எதற்கும் துணிந்தவன் படத்துக்கு பாமக எதிர்ப்பு எதிரொலி... சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு

Actor suriya : நடிகர் சூர்யா, வன்னியர் சங்க மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. 

Police provide protection for actor suriya house

சூர்யா - பாண்டிராஜ் கூட்டணி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் உருவாகி உள்ளது. பசங்க, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை போன்ற பல்வேறு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை இயக்கிய பாண்டிராஜ் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார். 

எதற்கும் துணிந்தவன் டீம்

இப்படத்தின் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்து இருக்கிறார். மேலும் திவ்யா துரைசாமி, சூரி, புகழ், சத்யராஜ், இளவரசு, தேவதர்ஷினி, வினய், எம்.எஸ்.பாஸ்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து உள்ளார்.

Police provide protection for actor suriya house

பாமக எதிர்ப்பு

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வருகிற மார்ச் 10-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையே ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை அவமதித்ததற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்காவிட்டால் கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி பாமக சார்பில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

நடிகர் சூர்யா, வன்னியர் சங்க மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... Director Bala divorce :இயக்குனர் பாலா மனைவியை பிரிய அரசியல் வாரிசு காரணமா? பிரபல நடிகர் வெளியிட்ட திடுக் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios