சில நேரங்களில் தேவையானது இது மட்டுமே... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட கட்டிப்பிடி புகைப்படம்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா, கடந்த 2004-ம் ஆண்டு பிரபல நடிகை தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்துவாழ்ந்த இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்களும் உள்ளனர்.
சுமார் 18 ஆண்டுகள், பலரும் பார்த்து பொறாமை பட கூடிய ஜோடியாக இருந்த இவர்கள், இந்த ஆண்டு ஜனவரி மாதம் பரஸ்பரமாக பிரிய உள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.
மேலும் செய்திகள்: வாவ்... பூஜா ஹெக்டேவின் தங்கைகளா இது..? தேவதை போல் இருக்காங்களே... வைரலாகும் போட்டோஸ்!
இதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என... ரசிகர்கள் தொடர்ந்து ஒரு பக்கம் கோரிக்கை வைத்து வந்த நிலையில், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில், இருவரது குடும்பத்தினரும் இறங்கினர்.
ஆனால் தனுஷ் விட்டுக்கொடுக்க தயாராக இருந்தும், ஐஸ்வர்யா மிகவும் பிடிவாதமாக இருந்ததாக கூறப்பட்டது. தற்போது கோவம் குறைந்து மீண்டும் தனுஷுடன் சேரும் முடிவில் ஐஸ்வர்யா இருப்பதாக கூறப்பட்டாலும், இருவர் தரப்பில் இருந்தும் இது வரை எவ்வித அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: பீச் பேபியாக மாறிய காஜல் மகன்... தொப்பை தொந்தியோடு அடையாளம் தெரியாமல் மாறி வீடியோ வெளியிட்ட நடிகை!
இருவரும் தற்போது தங்களுடைய திரைத்துறையில் பிஸியாக இருந்து வருகிறார்கள். டைரக்ஷனில் இறங்கியுள்ள ஐஸ்வர்யா பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் இயக்கி, வெளியிட்டார். ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பாலிவுட்டில் நேரடியாக படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
அதே போல் தனுஷ் ஹாலிவுட்டில் நடித்துள்ள 'தி கிரே மேன்' திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ளது. அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் பிசியாக நடித்து கொண்டும் உள்ளார். சமீபத்தில் கூட 'தி கிரே மேன்' ப்ரீமியர் நிகழ்ச்சியில் தனுஷ் தன்னுடைய மகன்களுடன் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆனது.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்துள்ள மகன்களுடன் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: முன்னாள் காதலருடன் உறவு கொள்வீர்களா? கரண் ஜவஹர் கேள்விக்கு ஜான்வி கொடுத்த பளீச் பதில்!
இரண்டு மகன்களையும் கட்டி பிடித்துக்கொண்டு... சில நேரங்களில் ….உங்களுக்கு தேவையானது அவர்களின் அணைப்பு மட்டுமே எனபதிவிட்டுள்ளார்.