- Home
- Cinema
- Dhanush Vs Aishwarya: மோதி பார்க்க தயாரான தனுஷ்! இப்போதே ஆட்டத்தை ஆரம்பித்த ஐஸ்வர்யா.. தாறுமாறு அப்டேட்!
Dhanush Vs Aishwarya: மோதி பார்க்க தயாரான தனுஷ்! இப்போதே ஆட்டத்தை ஆரம்பித்த ஐஸ்வர்யா.. தாறுமாறு அப்டேட்!
'லால் சலாம்' திரைப்படம், வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ள நிலையில், தற்போது இப்படம் குறித்த தாறுமாறு அப்டேட் ஒன்றை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Aishwarya Rajinikanth
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, 3 மற்றும் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி ஏற்கனவே ஒரு இயக்குனராக பிரபலமான நிலையில், சுமார் 8 ஆண்டு இடைவெளிக்கு பின்னர், குறிப்பாக தன்னுடைய கணவர் தனுஷுடன் விவாகரத்து பெற்ற பின்னர் மீண்டும் திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்த துவங்கினார்.
Lal Salaam Update
அந்த வகையில் இவர் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஈடுபட்டுள்ள இந்த படத்தை, லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ள, இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Simbu: கொரோனா குமார் பட சர்ச்சை! சிம்புவுக்கு படங்களில் நடிக்க தடையா? நீதிமன்றம் அதிரடி!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில், மொய் தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆவதை படக்குழு ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், தற்போது இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதாவது தீபாவளியை முன்னிட்டு, இந்த ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 12 ஆம் தேதி, காலை 10:45 மணிக்கு லால் சலாம் படத்தில் இருந்து, 1 நிமிடம் 34 வினாடிகள் கொண்ட ஒரு டீசர் வீடியோ வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் திருவிழாவின் போது, உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாவதையும் உறுதி செய்துள்ளது.
ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் பொங்கலை குறிவைத்து வெளியாக உள்ள நிலையில், இதே பொங்கல் பண்டிகையில் தான் தனுஷின் 'கேப்டன் மில்லர்' படமும் ரிலீசாகிறது. தனுஷ் தன்னுடன் மோதி பார்க்க தயாராக களத்தில் இறங்கிவிட்ட நிலையில், இப்போதே படத்தின் புரோமோஷனை ஐஸ்வர்யா துவங்கி விட்டதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.