காளிதாஸ் ஜெயராமுக்கு காதலியுடன் பிரமாண்டமாக நடந்த நிச்சயதார்த்தம்! ஒன்று கூடிய பிரபலங்கள்.. வைரல் போட்டோஸ்!
பிரபல மாடல் தாரிணி என்பவரை நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் தற்போது நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக அறியப்படுபவர் நடிகர் ஜெயராம். இவர் பிரபல மலையாள நடிகை பார்வதியை கடந்த 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காளிதாஸ் என்கிற மகன் மற்றும் மாளவிகா என்கிற மகள் ஒருவரும் உள்ளனர்.
காளிதாஸ் ஜெயராம், தனது ஏழு வயதில் மலையாள திரைப்படமான 'கொச்சு கொச்சு' சந்தோஷங்கள் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிலையில், முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசியதிரைப்பட விருதையும் பெற்றார். மேலும் இந்த படத்திற்காக பல விருதுகளை பெற்றார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு 'மீன் குழம்பும் மண் பானையும்' என்ற தமிழ் திரைப்படம் மூலம், தமிழில் அறிமுகமானார். இதை தொடர்ந்து பூமரம் என்னும் படத்தின் மூலம் மீண்டும் மலையாள படத்திற்கு திரும்பினார். இவர் திருநங்கையாக நடித்த 'நவரசா' வெப் தொடர், மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு மட்டும் இன்றி, காளிதாசுக்கு பெயரையும், புகழையும் பெற்று தந்தது.
அது போல் சமீபத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்திருப்பார். சில காட்சிகளில் மட்டும் தோன்றி இருந்தாலும் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் ஈர்த்தது காளிதாஸின் கதாபாத்திரம்.
கடைசியாக இவர் தமிழில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக காளிதாஸ் ஜெயராம் வெகுவாக பாராட்டப்பட்டார்.
தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில், வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கும் காளிதாஸ், சமீபத்தில் தன்னுடைய காதலியின் புகைப்படத்தை பகிர்ந்து தன்னுடைய காதலை உறுதி செய்த நிலையில், தற்போது காதலியுடன் இவருக்கு மிகப்பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
Japan Review: ஜப்பானாக கார்த்தி ஜொலித்தாரா? அல்ல சோதித்தாரா.. திரைப்பட விமர்சனம் இதோ..!
இவரின் காதலி பெயர் தாரிணி காளிங்கராயர். இவர் 2019-ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார். இவரின் திருமண நிச்சயதார்த்தத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. பலர் தங்களின் வாழ்த்துக்களை இந்த ஜோடிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D