Simbu: கொரோனா குமார் பட சர்ச்சை! சிம்புவுக்கு படங்களில் நடிக்க தடையா? நீதிமன்றம் அதிரடி!
'கொரோனா குமார்' பட சர்ச்சை தொடர்பாக சிம்பு மற்ற படங்களில் நடித்த தடை விதிக்க வேண்டும் என வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, நடிகர் சிம்பு வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா குமார் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் நடிப்பதற்காக அவருக்கு ரூ.9.5 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ.4.5 கோடி முன்பனமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
simbu
பணத்தைப் பெற்றுக் கொண்ட சிம்பு, கொரோனா குமார் படத்தை இதுவரை நடித்துக் கொடுக்காமல், மற்ற படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் அவருக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இடையே சிம்புவிடம் போடப்பட்ட ஒப்பந்தத்தில், ஒரு கோடி ரூபாய் மட்டுமே சிம்புக்கு முன்பணமாக வழங்கி உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே சிம்பு தரப்பில் இருந்து முன்பணமாக வாங்கிய ஒரு கோடியை வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து இது குறித்த விசாரணை இன்று நீதிபதி கி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
நடிகர் சிம்பு தரப்பில் இருந்து, நீதிமன்ற உத்தரவை மதித்து ஒரு கோடி ரூபாய் ஏற்கனவே டெபாசிட் செய்ததற்கான ரசீது தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து டெபாசிட் செய்யப்பட்ட தொகை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே செல்லும் என்றும், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தராக மூத்த வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என்று நீதிபதி உத்தரவிட்டதோடு, சிம்பு கொரோனா குமார் படத்தில் நடித்து முடித்த பின்னரே மற்ற படங்களில் நடிக்க வேண்டும் என்று வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் வைத்த கோரிக்கையை நிராகரித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D