அடுத்தவர் வாழ்க்கை உங்களுக்கு எதுக்கு? அடுத்த லேடி சூப்பர்ஸ்டாரின் அடிபொலி போஸ்ட்
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் சக்சஸ்ஃபுல் ஹீரோயினாக வலம் வரும் நடிகை ஒருவர், இன்ஸ்டாகிராமில் புத்தாண்டை ஒட்டி ஒரு வீடியோ வெளியிட்டு ஒரு பவர்ஃபுல் மெசேஜும் சொல்லி இருக்கிறார்.

Aishwarya Rajesh viral post
கோலிவுட்டில் நல்ல பெயர் பெற்று, பின்னர் டோலிவுட் திரையுலகிற்கு சென்று அங்கும் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார் பிரபல நடிகை. இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், அடுத்த லேடி சூப்பர்ஸ்டார் என்கிற அளவுக்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
பிசியான ஐஸ்வர்யா ராஜேஷ்
அந்த நடிகை வேறுயாருமில்லை, ஐஸ்வர்யா ராஜேஷ் தான். இவர் தமிழில் பல கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' திரைப்படம், ஐஸ்வர்யாவுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. அந்தப் படம் தமிழிலும், தெலுங்கிலும் நல்ல வெற்றியைப் பெற்று, டோலிவுட்டில் அவருக்கு ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்த ஆண்டு தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான சங்கராந்திக்கு வஸ்துன்னாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனால், இவருக்கு டோலிவுட்டில் வரிசையாக பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
சோசியல் மீடியா குயின்
இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார். விதவிதமான உடைகளில் புகைப்படங்களைப் பகிர்வது, தனது படங்களின் அப்டேட்களைக் கொடுப்பது என ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். இந்நிலையில், அவர் சமீபத்தில் பகிர்ந்த ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷின் வைரல் பதிவு
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நீல நிற உடையில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதற்கு, 'உங்களுக்கு நேரம் குறைவாக உள்ளது, எனவே அதை வேறொருவருக்காக வாழ்ந்து வீணாக்காதீர்கள்' என்று கேப்ஷன் போட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

