ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராய்... இன்னொரு பக்கம் த்ரிஷா.. ஏ.ஆர்.ரஹ்மான் தோளில் சாய்ந்து அமர்களப்படுத்திய போஸ்!
பொன்னியின் செல்வன் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும்... ஏ.ஆர்.ரஹ்மான் தோள் மீது கைபோட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பல வருடங்களாக சில முக்கிய பிரபலங்கள் எடுக்க முயற்சி செய்த நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை தற்போது, சில வருட போராட்டங்களுக்கு பின்னர் இயக்கி முடித்துள்ளார் இயக்குனர் மணிரத்னம்.
கடந்த சில வருடங்களாகவே... எப்போதும் திரையில் பார்க்கும், காதல், காமெடி, ஆக்ஷன் படங்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களையே ரசிகர்கள் அதிகம் வரவேற்கின்றனர். அந்த வகையில், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சரித்திர படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக்கு கிடைத்து வருகிறது.
மேலும் செய்திகள்: பேன்ட்டை எக்குத்தப்பா வெட்டி தைத்த ஸ்ட்ராப் லெஸ் டாப்... அதகள உடையில் பாலிவுட் நாயகிகளை அரச வைத்த ராஷ்மிகா!
அதே போல், நாவலை தழுவி எடுக்கப்பட்ட படங்களுக்கும், உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. அந்த வகையில் தற்போது நம் தமிழகத்தை ஆண்ட, சோழ மன்னர்களின் வரலாற்று குறிப்புகளை கொண்டு, புனையப்பட்ட கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் காவியத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது தான் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம்.
5 பாகங்களை கொண்ட இந்த நாவலை, தற்போது இயக்குனர் மணிரத்னம் 2 பாகம் கொண்ட திரைப்படமாக இயக்கி முடித்துள்ளார். மிகப்பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டில் ரெட் சல்வார் போட்ட பார்பி டாலாக மின்னிய ஐஸ்வர்யா ராய்! சொக்க வைக்கும் போட்டோ
'பொன்னியின் செல்வன்' முதல் பாகம், செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரும்... படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத் ஆகிய இடங்களை தொடர்ந்து இன்று மும்பையில் இந்த படத்தின் புரோமோஷன் பணி படு பிரமாண்டமாக நடந்தது.
அப்போது இந்த படம் குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு படக்குழுவினர் பதிலளித்தனர். மேலும் இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.
மேலும் செய்திகள்: மறக்க முடியுமா? பாடி மறைந்த நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றிய 15 சுவாரசியமான தகவல்கள்!
இந்த புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா ஆகியோர்... இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தோளில் கைபோட்டு எடுத்துக்கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக இப்படி நடிகைகளுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.