மறக்க முடியுமா? பாடி மறைந்த நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றிய 15 சுவாரசியமான தகவல்கள்!

தன்னுடைய இனிமையான குரலால் பல ரசிகர்கள் மனதை வசியம் செய்த பாடும் நிலா... எஸ்.பி.பி-யின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று. இவரை பற்றிய 15 சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
 

15 interesting facts about SP Balasubrahmanyam

இதே நாள்... செப்டம்பர் 25 ஆம் தேதி, கடந்த 2020 ஆம் ஆண்டு, கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம்... கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தன்னுடைய 74 வயதில் காலமானார். இவரது இறப்பு ஒட்டு மொத்த திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. இவர் இந்த மண்ணுலகில் இல்லை என்றாலும், தினமும் ஒலிக்கும் இவரது பாடல்கள் மூலம் ஒவ்வொரு ரசிகர்கள் மனதிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். இவரை பற்றிய 15 சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் திருவள்ளூர் மாவட்டம், கோனேட்டம்பேட்டையில் எஸ்.பி.சாம்பமூர்த்தி மற்றும் சகுந்தலாம்மா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். அவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் உள்ளனர்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தந்தை ஒரு நடிகர், பல்வேறு நாடகங்களில் நடித்தவர். அவர் ஒரு பிரபலமான ஹரிகதா விரிவுரையாளராகவும் இருந்தார். எஸ்.பி.பி-யின்  தாயார் ஒரு இல்லத்தரசி.

15 interesting facts about SP Balasubrahmanyam

மேலும் செய்திகள்: நான் மட்டும் நடிக்க வரலேன்னா... அந்த தொழில்ல இறங்கிருப்பேன் - நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்
 

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறு வயதிலிருந்தே இசை கற்கத் தொடங்கினார். அனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்த இவர், டைபாய்டு காச்சல் காரணமாக படிப்பை கைவிட நேர்ந்தது.

* பாடகி எஸ்பி சைலஜா, எஸ்.பிபாலசுப்ரமணியத்தின் உடல்பிறந்த சகோதரி ஆவார். அதே போல், எஸ்.பி.பியின் மகன், முன்னணி பாடகர் ஆவர். கீரவாணி, ஏஆர் ரஹ்மான் போன்ற போன்றவர்கள் இசையில் பாடியுள்ளார். அதே போல் தமிழ் சினிமாவில் இவர் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

* SP பாலசுப்ரமணியம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் பிற மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

15 interesting facts about SP Balasubrahmanyam

* பாடுவதைத் தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுமார் 48 தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகராக கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம் ஆதித்யாவின் தேவதாஸ் (2018).

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் டப்பிங் கலைஞராக சிறிது காலம் பணியாற்றியிருக்கிறார். தெனாலியின் (2000) தெலுங்குப் பதிப்பில் கமல்ஹாசனுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்.

* தி நியூஸ் மினிட் செய்தியில், எஸ்பி பாலசுப்ரமணியம் 12 மணி நேரத்தில் இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக 21 கன்னட பாடல்களை பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்: கவர்ச்சி புயலாய் மாறிய கீர்த்தி சுரேஷ்...கண்களில் அனல் பறக்கும் கிக் போஸ்
 

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இது தவிர, தமிழ்நாடு மாநில விருது மற்றும் கர்நாடக மாநில விருது போன்றவற்றையும் வென்றுள்ளார்.

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் பத்மஸ்ரீ (2001) மற்றும் பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளையும் பெற்றவர். இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்த ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமைக்கான நூற்றாண்டு விருது எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வழங்கப்பட்டது.

15 interesting facts about SP Balasubrahmanyam

* எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுவாரஸ்யமாக தான் பொறியியல் படித்த அனந்தபுரமு ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

* ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுக்கு 5 தசாப்தங்களுக்கும் மேலாக திரையுலக வாழ்க்கையில் குரல் கொடுத்தவர் என்கிற பெருமைக்குரிய ஒரே மனிதர் எஸ்பி பாலசுப்ரமணியம். 

மேலும் செய்திகள்: 'இந்தியன் 2' படத்திற்காக களரி பயிற்சியில் ஈடுபட்ட காஜல் அகர்வால்! உடலை வில்லாக வளைத்து மாஸ் காட்டும் வீடியோ!
 

* எஸ்.பி.பி எப்போதுமே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அறிமுக பாடலை பாடுபவர். இவருடைய கடைசி பாடலும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு அண்ணாத்த படத்தில் இடம்பெற்ற 'அண்ணாத்த... அண்ணாத்த...' என்கிற பாடலாகவே அமைந்தது.

* கடந்த 2020 ஆம் ஆண்டு இதே நாள் ரசிகர்கள் மனதை ரணமாக்கிவிட்டு சென்ற எஸ்.பி.பி திருவள்ளுவர் மாவட்டம், தாமரை பாகத்தில் அமைந்துள்ள இவருக்கு சொந்தமான ஃபாம் ஹவுசில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios