பேன்ட்டை எக்குத்தப்பா வெட்டி தைத்த ஸ்ட்ராப் லெஸ் டாப்... அதகள உடையில் பாலிவுட் நாயகிகளை அரச வைத்த ராஷ்மிகா!
நடிகை ராஷ்மிகா மந்தனா வித்தியாசமான கவர்ச்சி உடை அணிந்து... செம்ம ஸ்டைலிஷாக வெரைட்டி போஸ் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குறுகிய காலத்திலேயே தன்னுடைய கியூட் அழகால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்த, நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் தளபதி விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, சமீபத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா எடுத்து வெளியிட்ட செல்பி புகைப்படம் படு வைரலாக தளபதி ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. மேலும் இருவரும் டான்ஸ் ஆடும் போது இருக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: இந்த முறையும் ஏமார்ந்த விக்ரம்..! ஐஸ்வர்யா ராய் கிடைக்காததை எண்ணி நடிகரை மேடையில் புலம்ப விட்ட மணிரத்னம்!
விஜய்யின் வாரிசு படத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி, சுமார் 400 கோடி வசூலை ஈட்டி, பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும், ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் இரண்டாம் பாகத்தில் ராஷ்மிகா நடிக்கும் பகுதி குரைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது, முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் மிகவும் பிரமாண்டமாக இயக்க இயக்குனர் சுகுமார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தவிர பாலிவுட் திரையுலகிலும் நுழைந்து, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி வரும் ராஷ்மிகா சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக மிஷன் மஜ்னு என்கிற படத்திலும், அமிதாப் பச்சனுடன் இணைந்து குட் பாய் என்கிற படத்திலும் நடித்துள்ளார். அமிதாப்பச்சனுடன் இவர் நடித்துள்ள திரைப்படம் விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டில் ரெட் சல்வார் போட்ட பார்பி டாலாக மின்னிய ஐஸ்வர்யா ராய்! சொக்க வைக்கும் போட்டோ
இப்படி திரைப்படங்களில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது ரசிகர்களை வசீகரிக்கும் வண்ணமாக வெரைட்டியாக கவர்ச்சி போஸ் கொடுத்து வரும் ராஷ்மிகா தற்போது, பேன்ட்டை வெட்டி தைத்தது போல் ஸ்ட்ராப் லேஸ் மேலாடை அணிந்து, வேற லெவல் ஃபேஷனில் போஸ் கொடுத்து பாலிவுட் இளம் நடிகைகளை மிரள வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.