இந்த முறையும் ஏமார்ந்த விக்ரம்..! ஐஸ்வர்யா ராய் கிடைக்காததை எண்ணி நடிகரை மேடையில் புலம்ப விட்ட மணிரத்னம்!
இரண்டாவது முறையாக, உலக அழகி ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தும், அவர் கிடைக்காதது குறித்து பொன்னியின் செல்வன் செய்தியாளர் சந்திப்பில் விக்ரம் புலம்பிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதனால் இந்த படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகள் பிரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத்தை தொடர்ந்து இன்று மும்பையில் இந்த படத்தின் புரோமோஷன் நடந்தது. படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு, படக்குழுவினர் ஓய்வு இல்லாமல் சுற்றி வருகிறார்கள். அவ்வப்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய தினம் கூட மும்பையில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்தது. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, இந்த படத்தின் இயக்குனர் மணிரத்தினம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். தற்போது பிரமோஷன் பணிகள் ஈடுபட்டபோது நடிகர் விக்ரம் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: பொன்னியின் செல்வன் பிரஸ் மீட்டில் ரெட் சல்வார் போட்ட பார்பி டாலாக மின்னிய ஐஸ்வர்யா ராய்! சொக்க வைக்கும் போட்டோ
அதில் ஐஸ்வர்யா ராய் தனக்கு இந்த படத்திலும் கிடைக்காதது குறித்து சோகமாக பேசி உள்ளார். ஏற்கனவே விக்ரம் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த 'ராவணன்' படத்தில் ஐஸ்வர்யாராய் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில், ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொள்ளும் கதாபத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் ராவணன் கதாபாத்திரம் கொல்லப்படும். இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக 'பொன்னியின் செல்வன்' படத்தில், ஆதித்த கரிகாலன் நந்தியின் மீது காதல் கொள்ளும் கதாபாத்திரமாக இருந்தாலும், இந்த படத்திலும் விக்ரம் கதாபாத்திரம் கொள்ளப்படும்.
மேலும் செய்திகள்: மறக்க முடியுமா? பாடி மறைந்த நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் பற்றிய 15 சுவாரசியமான தகவல்கள்!
இரண்டு முறை... ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், இரண்டு முறையும் அவருடன் சேர முடியவில்லை என கலப்பாக இவர் மேடையில் புலம்பிய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.