- Home
- Cinema
- 'டாக்டர்' பட வெற்றியால் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!! அடேங்கப்பா... இத்தனை கோடியா?
'டாக்டர்' பட வெற்றியால் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!! அடேங்கப்பா... இத்தனை கோடியா?
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் (Doctor Movie) , ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் செய்த நிலையில், தற்போது அதிரடியாக தன்னுடைய சம்பளத்தை சிவகார்த்திகேயன் உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

'கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் (Nelson) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படம் மூலமாக தெலுங்கில் ‘கேங்ஸ்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா மோகன் (Priyanka Arul Mohan ) தமிழில் அறிமுகமாகிறார். யோகிபாபு (Yogibabu ), வினய் (vinay )உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் உடன் இணைந்து, சிவகார்த்திகேயனின் சொந்த நிறுவனமான எஸ்.கே.புரொடக்ஷனும் தயாரித்திருந்தது.
ராக் ஸ்டார் அனிருத் (anirudh) இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களின், எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாக, கடந்த மாதம் வெளியான 'டாக்டர்' திரைப்படம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
50 சதவீத பார்வையாளர்களுடன் 'டாக்டர்' படம் ரிலீஸ் ஆனாலும், 100 கோடி வசூல் சாதனை படைத்தது. அதே போல் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
படம் வெளியான ஒரே மாதத்தில், தீபாவளி திருநாளை முன்னிட்டு பிரபல தனியார் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பான இந்த படத்தை, திரையரங்கில் சென்று பார்க்க முடியாத பலர் வீட்டில் இருந்தவாரே கண்டு கழித்தனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து... சிவக்ரத்திகேயன் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை தன்னுடைய படத்திற்கு 20 முதல் 25 கோடி வரை சம்பளமாக பெற்று வந்தைவர், தற்போது அதிரடியாக 30 கோடிக்கு தாவியுள்ளாராம். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.