- Home
- Cinema
- Yami Gautam : பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராமை முடக்கிய ஹேக்கர்கள்... ரசிகர்களை அலர்ட் ஆக்கிய ஹீரோயின்
Yami Gautam : பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராமை முடக்கிய ஹேக்கர்கள்... ரசிகர்களை அலர்ட் ஆக்கிய ஹீரோயின்
Yami Gautam : தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவுகள் எதேனும் வந்தால் அதனை கண்டு கொள்ள வேண்டாம். கவனமாக இருங்கள் என நடிகை யாமி கவுதம் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சினிமா பிரபலங்களின் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் அவ்வப்போது ஹேக் செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கி ஹேக்கர்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.
தமிழில் ராதா மோகன் இயக்கிய ‘கெளரம்’ மற்றும் கவுதம் மேனன் தயாரித்த ‘தமிழ்ச்செல்வியும் தனியார் அஞ்சலும்’ போன்ற படங்களில் நடித்துள்ளவர் யாமி கவுதம். இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் 15 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கொண்டுள்ள யாமி கவுதம் அதில் ரசிகர்களை கவரும் விதமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நேற்றிலிருந்து என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்த முடியவில்லை. ஹேக் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகிறது. எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவுகள் எதேனும் வந்தால் அதனை கண்டு கொள்ள வேண்டாம். கவனமாக இருங்கள் என அவர் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் அதனை விரைவில் சரி செய்யும் பணியும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக நடிகை யாமி கவுதம் தெரிவித்துள்ளார். நடிகை யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... vijay : அதான் 4 கார் இருக்குல்ல, சைக்கிள ஏன் எடுத்துட்டு போனீங்க! நெல்சனின் கேள்விக்கு விஜய் சொன்ன 'நச்' பதில்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.