பட்டு புடவை அழகில்... மந்திர புன்னகையால் ரசிகர்களை மயக்கும் வாணி போஜன்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை வாணி போஜன், பட்டு புடவை கட்டி பேரழகியாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்... தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து... முன்னணி இடத்தை பிடிக்க போராடி வரும் நாயகிகளில் ஒருவர் வாணி போஜன். தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் சின்ன திரை ரசிகர்களை வசியம் செய்த கையேடு, வெள்ளித்திரையில் அம்மணி பல படங்களை கைப்பற்றி செம்ம பிசியாக நடித்து வருகிறார்.
சின்னத்திரையில் இருந்த போது, பெரிதாக எந்த ஒரு கிசுகிசுவில் சிக்காமல் இருந்த வாணி போஜன், வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பின்னர், பிரபல நடிகர் ஜெய்யுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். பின்னர் தன்னுடைய கேரியர் பாதிக்கும் என்பதால் ஜெய் உடனான காதலை முறித்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை இது குறித்து இருவருமே வாய் திறக்கவில்லை.
மேலும் செய்திகள்: விபத்தில் சிக்கிய நடிகை பூஜை ஹெக்டே..! கட்டுடன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!
அடுத்தடுத்த பட வாய்ப்புகளோடு, செம்ம பிசியாக வலம் வரும், வாணி போஜன்... அவவ்போது ரசிகர்களை மயக்கும் விதமாக பல போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது எலகென்ட் அழகில், ஆஷ் கலர் சேலையில் பர்பிள் நிற ஜாக்கெட் போட்டு இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்: Nayanthara Salary 'God Father' படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு மட்டும் இத்தனை கோடி சம்பளமா? வெளியான தகவல்!